மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

அண்ணனுக்கே கோபம் வந்துருச்சே: அப்டேட் குமாரு

அண்ணனுக்கே கோபம் வந்துருச்சே: அப்டேட் குமாரு

‘என்ன அண்ணே, இப்போ எல்லாம் டீயில சக்கர அளவு ரொம்ப கம்மியா இருக்கே?’ன்னு சாதாரணமா தான் டீக்கடை அண்ணா கிட்ட கேட்டேன். நான் கூட ‘தம்பி உனக்கு சுகர் வந்திரக்கூடாதுன்னு அக்கறையில சக்கரை கொஞ்சமா போட்டேன்பா’ன்னு நம்ம முதலமைச்சர் மாதிரி சிரிச்சிட்டே பதில் சொல்லுவாருன்னு எதிர்பாத்தா, ‘ஆமா, பத்து ரூபா டீயில நான் பதினஞ்சு ரூபா சக்கரை போடணுமாக்கும்? விலைவாசி என்னன்னு தெரியுமா? கேஸ் விலை எவ்வளவுன்னு தெரியுமா?’ அப்டீன்னு கோவமா கத்தி ஷாக்க கொடுத்திட்டாரு. மன்னிசிருங்க அண்ணேன்னு மனசார கேட்டிட்டு திரும்பி பாத்தா டிவியில நம்ம எடப்பாடி ஐயாவும் கோவமா திட்டுறாரு. இந்த சோகத்தத் தாங்க முடியாம டிவிட்டர் பக்கம் போனா, வீடியோ வெளியான அஞ்சு நிமிஷத்திலேயே ஒருத்தர், முதல்வர் திட்டுறதப் போட்டு ‘நெருப்புடா நெருங்குடா’ன்னு வாட்சப் ஸ்டேட்டஸ் போட்டிருக்காங்க. நீங்க அப்டேட்ட படிங்க. நான் டீக்கடை அண்ணாவ ஒரு எட்டு போய் பாத்திட்டு வர்றேன்.

ஜோக்கர்

"உனக்கு பிடிச்ச மாதிரி வாழ்றதுதான் வாழ்க்கை" ன்னு சொல்லி,

ஆனா அதை எப்படி வாழணும்னு நான் சொல்லி தர்றேன்னு சொல்ற கூட்டத்துக்கு பெயர்தான்

"சமுதாயம்"

ஜால்ரா காக்கா

ஆட்சி நாற்காலியில் அமர வேண்டியவர், 'துறவி' போல இருக்க வேண்டும்!- தமிழருவி மணியன்.

70 வயசுல ஹீரோயின் கூட டான்ஸ் ஆடிட்டுட்டு படத்துக்கு 100 கோடி ரூவா வாங்குற துறவியை நான் பார்த்ததே இல்ல

கடைநிலை ஊழியன்

"சீறும் பாம்பை நம்பு , சிரிக்கும் பெண்ணை நம்பாதே" - அன்றைய ஆட்டோ வசனம் !!

"நேரில் பார்த்தல் பெண் என்று நம்பு , டிபியை பார்த்து ஏமாறாதே" - இன்றைய ஆட்டோ வசனம் !!

மயக்குநன்

ரஜினி அரசியலுக்கு வந்தால், 'ஆட்சி மாற்றம்' ஏற்படும்!- தமிழருவி மணியன்.

அதுக்கு முன்னால... அரசியலுக்கு வர்றதுக்கான 'மனமாற்றம்' அவருக்கு ஏற்படணுமே..?!

ஆர்வக்கோளாறு

ரஜினி மலை .. அஜீத் தலை .. - ராஜேந்திர பாலாஜி

இனி உனக்கு தேவையில்லை இரட்டை இலை ..

VASUGI BHASKAR

ஆர்.எஸ்.பாரதி மாற்றிக்கொள்ள வேண்டியது “ஆதி திராவிடற்கு திமுக இட்ட பிச்சை” என்கிற அந்த ஒற்றை வார்தையையல்ல, இந்த மனநிலையை.

ஷிவானி சிவக்குமார்

500 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை தாரைவார்த்து கொடுத்துட்டு அவன் சாப்பாடு போடுறான்னு சாதனைப்போல் சொல்லாதீங்க .!?

ஆனந்தபவன் கிட்ட கொடுத்தா அவனும் போடுவான்..!!

- பேராசிரியர் ஜெயரஞ்சன்

கோழியின் கிறுக்கல்!!

யார் கூடயாவது பிரச்சனைனா நேர்லயோ போன்லயோ அவங்க கிட்ட சொல்லுங்க!!

WhatsApp status வச்சி சொ(கொ)ல்லாதீங்க!?

மெத்த வீட்டான்

பசியில் இருப்பவனுக்கு

வாசனைதான் முதல் உணவு !

KuTTy

ஏலே நீ வேணும்னா பாரு..,

NPR கணக்கெடுப்புல நாம் தமிழர் தம்பிங்க கிட்ட முப்பாட்டன் யாருனு கேட்டா இராவணன்னு சொல்ல போறானுங்க..!

மத்திய அரசே அதிரப்போவுது..

மெத்த வீட்டான்

மனசு சரியில்லை என்பது தவறு..

மனசை நாம் சரியாக வைத்திருக்கவில்லை என்பதே சரி...!

மாஸ்டர் பீஸ்

பழக்கடை வச்சிருக்கறவங்க ஜூஸ் கடை வச்சிருப்பதும்,

கறிக்கடை வச்சிருக்கறவங்க கறி பக்கோடா, சூப் கடை வச்சிருப்பதும்,

எழுதப்படாத விதி!

-லாக் ஆஃப்

குமாரு

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon