மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

டிக் டாக்: கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிலை கூட அதிசயம்!

டிக் டாக்: கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிலை கூட அதிசயம்!

உயிரே இல்லை என்றாலும் உயிரோட்டமான சிலைகளை நாமும் ரசித்துப் பார்த்திருப்போம். விலங்குகள், பறவைகள் என உயிரினங்களின் சிலை, மனிதர்களின் உருவம், கடவுளின் மறு உருவம் என எந்தவிதமான சிலையாக இருந்தாலும் அவை நமக்கு ஆச்சரியத்தைப் பரிசளிக்கிறது.

ஆனால் முழுமையடைந்த சிலைகளைப் பார்த்து மிரண்டு போகும் நாம், அந்த சிலைகளை வடிவமைத்த கலைஞர்களைப் பல நேரம் மறந்து போகிறோம். கருங்கற்பாறைகளும், கல்லும், மண்ணும், சிமெண்டும் தான் அந்த கலைஞனின் கைவண்ணத்தால் உயிரோட்டமான உருவம் பெறுகிறது.

இவ்வாறு மறைந்த நின்ற கலைஞர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது, இன்றைய சமூக வலைதளங்கள். அதிலும் டிக் டாக் தளத்தில் மிக எளிதாகவே தாங்கள் எடுக்கும் வீடியோக்களைப் பதிவேற்றி வருகின்றனர்.

@santhosh4275273931424

today work #கருப்பசாமி குதிரை#🙏#outline potachu#சிற்பக்கலை#love my job

♬ original sound - Vigneswaran

ஒரு சிலை செய்ய ஆரம்பித்து, எவ்வாறு அதனை வடிவமைக்கிறார் என்றும் அவ்வாறு செய்வதில் இருக்கும் கஷ்டங்கள் குறித்தும் வீடியோ மூலமாக மக்களுக்கும் உணர்த்துகிறார், இந்த சிற்பக் கலைஞர்.

@santhosh4275273931424

#my work#horse 🐎🐎🐎🔥#sculpture #temple architecture

♬ original sound - 🔥சிற்பக்கலைஞன் 🔥

வண்ணங்கள் தீட்டப்பட்டு, முழுமையடைந்த பின்னர் நாம் பார்க்கும் சிலைகளுக்குப் பின்னால் இத்தனை வேலைகள் இருக்கிறதா என்று நம்மை ஆச்சரியமடையச் செய்கிறார்.

@santhosh4275273931424

today wrk🙏🙏🙏🙏#செய்யும் தொழிலே தெய்வம் 😊,#i love my wrk🔥

♬ original sound - 🔥சிற்பக்கலைஞன் 🔥

சாதாரண சிலைகளைத் தாண்டி, கடவுள் உருவங்களை செதுக்கும் போது அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார். இத்தகைய வீடியோக்கள் மூலம் உலக வெளிச்சத்திற்கு வந்த அவர் பாராட்டுகளோடு, புது வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.

டிக் டாக் யூஸர்

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon