சாக்லேட்டுக்கு உசுர விட பாத்த கதை :அப்டேட் குமாரு

entertainment

ஃபாரீன்ல இருந்து வந்த நண்பர் ஒருத்தரைப் பாக்க வீட்டாண்ட இருக்க ஒரு டாஸ்மாக்குக்கு போயிருந்தேன். அவர் கொண்டாந்த ஃபாரீன் சாக்லேட்டை என்கிட்ட குடுத்துட்டு, வீட்ல இருந்து கொண்டுபோன ஊறுகாயை வாங்கிக்கிட்டாரு. அப்பறம் அரசியல் மேட்டரெல்லாம் பேசிட்ருந்தப்ப, என்னய்யா போராட்டம் போராட்டம்னு நாட்டையே குட்டிச் சொவரா மாத்தி வெச்சிருக்கீங்க. இதே ஃபாரீன்ல எல்லாம் வந்து இப்படி பண்ணா, விட்டு வெளுத்து விட்ருவாய்ங்க தெரியுமா அப்டின்னு ரொம்ப அளந்துக்கிட்டு இருந்தார். ஒரு டப்பா ஃபாரீன் சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டு உசுர விட பாத்துருக்கியேடா குமாருன்னு நினைச்சிக்கிட்டே இருந்தப்ப, கடைல வேலை செய்ற தம்பி வந்து, அண்ணே வெளி உணவு பொருட்களுக்கு அனுமதி இல்லை. ஊறுகாய் பாட்டிலை வெளிய கொண்டுபோங்கன்னு சொல்லிட்டான். டேய் என்கிட்டயே இப்படி பேசுறியா. இதே ஃபாரீன்ல இப்படியெல்லாம் என்கிட்ட பேசமுடியாது தெரியுமா? என் முகத்துக்கு நேரா கைநீட்டி பேசுனாலே அவ்வளவு தான் அப்டின்னு பேச ஸ்டார்ட் பண்ணார். எலே, உனக்குன்னா ஃபாரீன் சட்டம் உதவும். போராட்டம் பண்ணா உதவாதான்னு சொல்லி, பக்கத்துல இருந்த பாட்டிலை கைல எடுத்தேன். ஒரு நிமிஷம் ஃபோன் பேசிட்டு வந்துடுறேன்னுட்டு வெளிய போனவரு இன்னும் வரல. இவன் வேற ரெண்டு தரம் வந்து பில்லை கேட்டுட்டு போய்ட்டான். நான் போய் என்னன்னு பாத்துட்டு வர்றேன். அப்டேட்டை படிங்க.

**பழைய சோறு**

அடுப்பங்கரை பெண்ணுக்கு கடற்கரை காற்றென்பது கடவுள் தான்..!

**மாஸ்டர் பீஸ்**

வாழ்க்கை ஒரு ஸ்டேஜ்ல நம்மை கனமற்றவனாக மாற்றிவிடும்…

அப்போது, அதி உயரமோ! நெடு பள்ளமோ! நமக்கு ஒன்றாகத்தான் தெரியும்!

வசதியில ஆடவும் மாட்டோம்,

வறுமையில வாடவும் மாட்டோம்!

**Janakiraman.agm**

என்னதான் நமக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும் சாக்கடையில் விழுந்து விட்டால் எழுந்து வரவேண்டுமே தவிர அங்கும் நீச்சல் அடிக்கக் கூடாது.

**பூக்களின் தேவதை **

எந்த ஒரு உறவிலும்..

சற்று இடைவெளி விட்டே இருங்கள்..

இல்லையெனில்..

பிரிவு வரும் நேரம்

யோசனை வரும்..

உன்னிடம் நான்

அளவோடு இருந்திருக்க வேண்டும் என்று..

**Kavin Malar**

எங்கெங்கோ சென்றிருக்கிறேன். ஆனால் முக்கடல்களும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்குச் சென்றதில்லை. இதுவரை பார்த்ததில்லை. இனியும் பார்க்கத் தேவையில்லை எனும் அளவுக்கு அதை சென்னை வண்ணாரப்பேட்டையில் பார்த்துவிட்டேன்.

இரண்டு வீதிகள் முழுவதும் பெண்கள். அந்த வீதிகள் சங்கமிக்கும் இடத்தின் மூன்றாவது பக்கம் ஆண்கள். மூன்றுக்கும் நடுவே போராட்டக்களத்தின் மேடை.

எந்தப் புகைப்படமும் காணொளியும் இந்தக் கூட்டத்தின் அளவை ஒரே கோணத்தில் காட்டிவிட முடியாது. ஏரியல் வ்யூவைத் தவிர.

நேரே வந்து பாருங்கள். எழுத்தாளர்களாய் கலைஞர்களாய் களச்செயற்பாட்டாளர்களாய் இருக்கும் அனைவருக்கும் சென்னையின் ஷாஹீன் பக் என்றழைக்கப்படும் பழைய வண்ணாரப்பேட்டைக்கு ஒரு பயணம் மேற்கொள்ளுமாறு வேண்டுகிறேன். அங்கு காணப்படும் உறுதியும் உணர்வெழுச்சியும் புத்துணர்வூட்டுகின்றன. இக்கொடிய குடியுரிமைச் சட்டத்துக்கு நம் மக்கள் முடிவு கட்டுவார்கள் என்கிற நம்பிக்கையை ஊட்டுகின்றன.

**ராஜேஷ்குமார் வீரசேகர்**

சிவலிங்கா னு ஒரு படம் டிவில ஓடுது…

பேசிப் பேசியே பேயை திருத்திட்டார் லாரன்ஸ் மாஸ்டர்..

சல்யூட்..

**மாஸ்டர் பீஸ்**

வாழ்க்கையை வெறுக்கும் தருணங்களில்…

‘போதி’மரம் தேடி போறவன் மனுசன்,

‘போதை’மரம் தேடி போறவன் பெரிய மனுசன்!

**Rᴇᴋʜᴀ Jᴀᴍᴇꜱ**

நேரம் வரட்டும்

செய்யலாம் என்று

காத்திருப்பதும்..

காலம் வந்தால்

எல்லாம் தன்னாலே கிடைக்கப்பெறும் என்ற

மூட நம்பிக்கையோடு

கனவு காண்பதும்

ஒருபோதுமே

உன் வாழ்க்கைக்கு

உகந்தது அல்ல..!

ஆகயால் செய்வதை

இன்றே துணிந்து

செய்..!!!

**Karunakaran Karthikeyan**

இந்த உலகம் ஒரு நாள் சுற்றுவதை நிறுத்தக்கூடும். கடல் அலைகளும் காற்றும் ஸ்தம்பிக்கக்கூடும். அன்றைக்கும் கூட மூன்று பக்க அளவில் மனுஷ் கவிதையும், சரவணன் சந்திரன் கட்டுரையும் எழுத வாகாக ஏதேனும் சம்பவம் நடந்து விடும்.

**Muthu Ram**

சாதி சார்ந்த அடையாளங்களை சுமந்துகொள்வதில், தக்கவைத்துக்கொள்வதில் தமிழர்கள் புதுப்புது வழிகளை அவ்வப்போது கையாள்வது வழக்கம்.

மாட்டுக் கொம்புகள், டயர் வண்டி, வீட்டுச்சுவர், பைக், டீ-சர்ட், கையில் கட்டும் கயிறு, Hand band என அத்தனை இடங்களிலும் சாதி குறியீடுகளை வரைந்து வளம்வருவார்கள். இங்கு சாதி குறியீடு என்ன என்பதை அந்தந்த கட்சி & சாதி பெயரிட்டு கூகுள் செய்து கொள்ளவும். இதெல்லாம் Personal property. போய்த்தொலைனு விட்றலாம்.

இப்போது Public property -யை கையில் எடுத்துள்ளார்கள். மின்கம்பங்கள், சிறு தெரு பாலங்கள், ஊருக்கு வெளியில் உள்ள கண்மாய் பாலங்கள், புளியமரம், ஆலமரம் என ஒன்று விடாமல் கொடி வண்ணங்களை வரைந்துள்ளார்கள். இதன் பின்னால் உள்ள நோக்கம் ஒன்று ஒன்றுதான். “இது எங்க ஏரியா!” என்பது.

இதில் ஈடுபடுவது அவ்வளவும் கிராமப்புற பள்ளி சிறுவர்கள். இந்தக் கொடி வண்ணங்கள் பாமக & விசிக கட்சி சார்ந்தது. இந்த செயல்பாடுகள் எந்த வகையிலும் சமூக அமைதிக்கு உதவுவதில்லை. சமூகத்தில் ஏற்கனவே இருக்கும் பிளவுகளை பெரிதாக்கி பகை மூட்டவும், மாற்று சாதியினர் தெருக்களைக் கடக்கும்போது தேவையில்லாத பதற்றத்தையும், நெருடலையும் ஏற்படுத்தவே செய்கிறது.

இவை VAO, வட்டாட்சியர் அளவில் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு, இந்த வண்ணங்கள் நீக்கப்பட வேண்டும். மேற்கொண்டு தொடராமல் இருக்க மாவட்ட ஆட்சியர், காவல்துறை சார்பில் எச்சரிக்கை விளம்பரங்கள் செய்யப்பட வேண்டும்.

‘ஆசிரியர்கள் மாணவர்கள் மேல் கை வைக்கக் கூடாது’ என்ற உன்னத நிலைப்பாட்டின் collateral damage ஆக இதை பார்க்கிறேன். கை வைக்க வேண்டும்னு சொல்லல. இந்தச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். இந்த செயலில் உள்ள inappropriateness அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். எதோ ஒரு புள்ளியில் சமத்துவத்தின் முக்கியத்துவத்தைக் கற்பிக்க தவறியுள்ளோம். அல்லது எதையோ கவனிக்கத் தவறியுள்ளோம். We missed something fundamentally. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

-குமாரு லாக் ஆஃப்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *