Wநியூசிலாந்தின் மர்ம மைதானங்கள்!

entertainment

இந்திய நேரப்படி பிப்ரவரி 20ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் அணி சந்திகும் போட்டி தொடங்குகிறது. டி20 தொடரில் வெற்றி, ஒருநாள் தொடரில் தோல்வி என இரு அணிகளும் சம நிலையில் இருக்கின்றன. மீதமிருக்கும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் வெற்றி பெறும் அணி, உலக அரங்கில் முக்கிய கவனம் பெறும். காரணம், டெஸ்ட் சாம்பியன்ஸ் கோப்பை அறிவிக்கப்பட்டதிலிருந்து சிறப்பாக விளையாடிவரும் இரு அணிகளாக இந்தியாவும், நியூசிலாந்தும் இருக்கின்றன. அதிலும், நியூசிலாந்தின் சொந்த மண்ணில் விளையாடப்படும் போட்டி என்பதால் அதன் கை ஓங்கி இருக்கிறது.

நியூசிலாந்தைப் பொறுத்தவரையில், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் சொந்த மண்ணில் விளையாடிய 19 டெஸ்ட் போட்டிகளில், இரண்டாவது பேட்டிங் செய்தபோது 11 போட்டிகளில் வென்றிருக்கிறது. மூன்று போட்டிகளில் தோல்வியும், ஐந்து போட்டிகளை டிரா செய்தும் இருக்கிறது. இதனை நியூசிலாந்தின் அதிர்ஷ்டம் என ரசிகர்கள் கருதினாலும், அதைத்தாண்டி ஒன்று இருக்கிறது. அது திறமை.

நியூசிலாந்து மண்ணில் விளையாடப்பட்ட டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 276ஆக இருக்கிறது. அதே இரண்டாவது இன்னிங்ஸில் 417ஆக இருக்கிறது. எனவே, முதல் இன்னிங்ஸுக்கும், இரண்டாவது இன்னிங்ஸுக்கும் இடையே ஏற்படும் ஏதோ ஒருவித மாற்றம் ஆட்டத்தின் போக்கை மாற்றுகிறது. அப்படி என்ன மாற்றம் மைதானத்தில் நடைபெறுகிறது என்பது குறித்து நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டௌல் விளக்கும்போது “நியூசிலாந்தின் மைதானங்கள் மிகவும் சமதளமாக தயார்படுத்தப்படுகின்றன. எனவே, பவுலர் என்ன நினைக்கிறாரோ அதைவிட சிறப்பாக பந்து செயல்பட்டு பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக மாறிவிடும். இது இரண்டு நாட்கள் வரை தாங்கக்கூடும். அந்த இரண்டு நாட்களில் இரண்டு அணிகளின் இன்னிங்ஸும் முடிந்துவிடும். அதிகமுறை பயன்படுத்தப்பட்டுவிட்டதால் மைதானத்தின் இயல்பு தானாகவே மாறிவிடும். எனவே, முதல் இன்னிங்ஸில் முடிந்தளவு அதிக ரன்களை எடுத்துவிட்டு, டிக்ளேர் செய்துவிட்டால் எதிரணியின் முதல் இன்னிங்ஸை முடக்கி இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிரடியாக விளையாடி ஸ்கோர் செய்துவிடவேண்டும். எதிரணியின் இரண்டாவது இன்னிங்ஸை முடக்குவதே வெற்றி வாய்ப்பை இங்கு தேடித்தரும்” என்று கூறியிருக்கிறார். எனவே, அதிர்ஷ்டம் என்பதைத் தாண்டி திறமையை அதிகம் பயன்படுத்தினால் நியூசிலாந்துடனான முதல் டெஸ்டில் வெற்றி பெறலாம்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *