மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

யூட்யூபில் இயக்குநராகக் களமிறங்கிய ரம்யா

யூட்யூபில் இயக்குநராகக் களமிறங்கிய ரம்யா

நடிகையாக மட்டுமல்லாமல் பாடகராகவும் தன்னை நிரூபித்த நடிகை ரம்யா நம்பீசன் YouTube தளத்தில் தனக்கென தனி ஒரு சேனலை “Ramya Nambeesan Encore” எனும் பெயரில் ஆரம்பித்துள்ளார். ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த சேனலில் தனது இயக்கத்தில் முதல் குறும்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். The Hide (UN)learn எனும் அந்த குறும்படம் இப்போது ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

தனது புதிய பரிமாணத்தில் களமிறங்கியது குறித்துப் பேசிய ரம்யா “ ‘Ramya Nambeesan Encore’ என இணையம் வழி தொடங்கியிருக்கும் எனது இந்தப் பயணம் என் மனதுக்கு நெருக்கமானது. உலகில் உள்ள அனைவருடனும், எனது அன்பை, உணர்வை பகிர்ந்து கொள்ள எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு இது. எனது பார்வையை, எனது உலகத்தை, புதுப் புது ஐடியாக்களை, பல புதுமையான விஷயங்களை முயன்று பார்க்கும் மிகப்பெரிய சுதந்திரம் இந்த Youtube தளத்தின் மூலம் எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்த தளத்திற்காக முதல் வீடியோவாக The Hide (UN) learn எடுக்க ஆரம்பித்தேன். இது இயக்குநராக எனது முதல் முயற்சி. இந்த வீடியோ இன்றைய நவநாகரீக உலகில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை, இந்திய சமூகத்தில் அவர்களின் நிலையை சொல்லக்கூடியது. இந்த வீடியோ எனது முதல் படைப்பாக தமிழுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட எனது Youtube தளத்தில் வெளியானது எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த வீடியோ வழக்கமான வீடியோ போல் வெறும் பிரச்சினைகளை மட்டுமே பேசக்கூடிய ஒன்று அல்ல. இறுதியில் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பற்றி விவாதிக்க செய்வதாக இருக்கும். எனது இந்த Youtube தளம் இது போல் குறும்படஙகள் மட்டுமல்லாது, பாடலகள், நடனம் மற்றும் கலைவடிவங்கள் பலவற்றையும் முயற்சிக்கும் ஒன்றாக இருக்கும்” என்றார்.

Ramya Nambeesan Encore N Poetic Stories தயாரித்துள்ள “The Hide (UN) learn” வீடியோவை ரம்யா நம்பீசன் கருவாக உருவாக்கி, தன் குரலில் விவரித்து இயக்கியுள்ளார். மேலும் தொழில்நுட்ப கலைஞராக மட்டுமல்லாமல் ஸ்ரிதா ஷிவதாஸ் உடன் இணைந்து இந்த வீடியோவில் நடித்துள்ளார். பத்ரி வெங்கடேஷ் இந்த வீடியோவிற்கு வசனம் எழுதியுள்ளார். நீல் சுன்னா ஒளிப்பதிவு செய்ய ரோஜின் தாமஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். ரம்யா நம்பீசனின் சகோதரர் ராகுல் சுப்பிரமணியம் இந்த வீடியோவிற்கு இசையமைத்துள்ளார்.

-சிவா

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon