மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

ஏமாத்தினது தப்புன்னா ஏமாந்ததும் தப்பு தான்: அப்டேட் குமாரு

ஏமாத்தினது தப்புன்னா ஏமாந்ததும் தப்பு தான்: அப்டேட் குமாரு

நேத்து ஆஃபீஸ்க்கு லீவு போட்ட தம்பி ஒருத்தன் ‘டிக் டாக் வித் மை லவ்’ அப்டீன்னு கேப்ஷன் போட்டு ஃபேஸ்புக்ல வீடியோ ஒண்ண ஷேர் பண்ணியிருந்தான். நான் கூட இந்த 2k பசங்க இவ்வளவு சீக்கிரமே கமிட் ஆகுறாங்களே, லவ்வர்ஸ் டே தான் கொண்டாடப் போயிருப்பாருன்னு ஒரு ஆதங்கத்தோடயும், கொஞ்சம் ஆர்வத்தோடயும் வீடீயோவத் தொறந்து பாத்தேன். பாத்தா ‘என் தேவதை எப்படி இருக்கான்னு பாருய்யா’ன்னு சொல்லி பொசுக்குன்னு அவன் பைக்க காட்டுறாப்புல. கரெக்ட்டா அந்த நேரம் பாத்து ஆஃபீஸ்குள்ள வந்த அவன் கிட்ட, ‘என்னப்பா இப்பிடி ஏமாத்திட்டியே?’ன்னு கேட்டா, ‘நான் எங்க அண்ணே ஏமாத்தினேன். லவ்ன்னு தானே சொன்னேன். என் பைக் தான் என்னோட லவ். இது ஏமாத்துறது இல்ல அண்ணே. ஒருவேள ரஜினிகாந்த் எல்லாம் போராட வருவாருன்னு சொன்னத நீங்க நம்பி இருந்தீங்கண்ணா அது தான் ஏமாற்றம். இது தவறான புரிதல்’னு புதுசா ஒரு விளக்கம் தர்றாரு. இதுக்கு எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம, ‘நேத்து லீவு போட்டதுக்கு பதிலா நாளைக்கு வருவீங்க தானே’னு கேட்டேன். அப்டியே முறைச்சு பாத்திட்டு போய்ட்டான். நீங்க அப்டேட்ட படிங்க. நான் அந்த வீடியோவுக்கு ஒரு ஹார்ட்-அ போட்டு விட்டு அவன சமாதானம் செஞ்சிட்டு வர்றேன்.

ஜால்ரா காக்கா

பிரிவினை அரசியல் நடக்கிறது, எனினும் ஒன்றுபட்டு இருக்கிறோம் - ஏ.ஆர் ரஹ்மான்

படுபாவிகளா ஆஸ்கார் வாங்கும் போது கூட அமைதியா இருந்த மனுசனையும் கடைசியில அரசியல் பேச வச்சுட்டீங்கலேடா

இதயவன்

டெல்லி தேர்தலில் எனது வியூகம் தவறாகிவிட்டது - அமித் ஷா

ஆகையால் அகில இந்திய பிஜேபி தலைவர் பொறுப்பை என்னிடம் கொடுத்தால் சிறப்பா செய்வேன் ~ எஸ்.வீ.சேகர்

Syed Khaleel

சார், ஒரு முஸ்லிமை கொண்ணுட்டாங்க..

அதுக்கு தான் ரகுவரனை கடைசி சீன்ல தூக்கி போட்டு மிதிச்சேனே.. பாக்கல?

மாஸ்டர் பீஸ்

லவ்வர்ஸ் டே கொண்டாடல இஸ் எ வேர்ட்,

லவ்வர் இல்லை இஸ் ஆன் எமோசன்!

ச ப் பா ணி

எல்லா பட்ஜெட்டிலும் இருக்கும் ஒரே வரி..

'இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் பட்ஜெட்" எனும் வரியே

சரவணன். ℳ

'வீதிக்கு வாங்க ரஜினி'ன்னு கூப்பிடறீங்களே, ரெய்டு வந்து வீதிக்கு வந்துடக்கூடாதுன்னு தான் வராமே இருக்கேன். அப்டி இருந்தும் இப்படி சொல்லிக்கிட்டே இருந்தா எப்படி...?

தியோ

பொய்களை நிரூபிக்க போலிக் காரணங்கள் போலியானவர்களால் உருவாக்கப்படுகிறது.

மாஸ்டர் பீஸ்

மெச்சூரிட்டி என்பது யாதெனில்!

காயப்படுத்தியவர்களை காயப்படுத்தும் வாய்ப்பிருந்தும் காயப்படுத்தாமல் கடந்து செல்வது!

புகழ்

நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதில் இருக்கும் இன்பம்..

ஞாயிற்றுக்கிழமையில் இருப்பதில்லைதானே.

இதயவன்

பாஜக ஒரு தேங்காய் மூடி கட்சி பணம் தரும் கட்சியல்ல-ராதாரவி

நீங்க இனியும் மாற இந்தியால வேற கட்சி இல்ல தெய்வமே?!!

PrabuG

இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என்றால் நான் குரல் கொடுப்பேன் - ரஜினி.

அவர் பட டப்பிங் வேலையைப் பத்தி சொல்லியிருப்பார் போல... நீங்க தவறா புரிஞ்சிகிட்டு ஏன்டா...

mohanram.ko

இப்ப என்ன பண்ண போறோம்?

வீட்லயே இருக்கப்போறோம், 'கேட்'டை திறக்காமலே

ஜால்ரா காக்கா*

“2 கோடி கையெழுத்து பெறப்பட்டதாக ஸ்டாலின் கூறுவதை நம்ப முடியவில்லை” - பொன்.ராதாகிருஷ்ணன்

மிஸ்ஸ்ட் கால் மூலம் 2 கோடி பேரு சேர்ந்தாங்கன்னு சொல்லி இருந்தா நம்பி இருப்பீங்கல

ஷிவானி சிவக்குமார்

ஒரு இஸ்லாமியர் பாதிக்கபட்டாலும் நான் முதலில் வருவேன்னு சொன்னவரு எங்கய்யா.!?

கேட்டு சாவிய கூர்க்கா தூக்கிட்டு போய்ட்டானா.!?

பர்வீன் யூனுஸ்

தமிழ் மக்களின் வளங்களை வாரி சுருட்டுவது போல் இருக்கிறது பட்ஜெட் - கமல்ஹாசன்

நடுத்தர மக்களின் வருமானத்தை உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ரிலீசாகி சுருட்டற மாதிரியா..?

வி.சி. கிருஷ்ணரத்னம்

அரசன்: "புலவரே! மாறுதலுக்கு ஒரு ஆங்கில ஹிட் பாட்டு பாடப்போகிறீர்களா, எங்கே பாடும்... கேட்கலாம்."

புலவர்: " 'லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி, பே அட்டென்ஷன் லிஸன் டு மீ' மன்னா!'

-லாக் ஆஃப்

குமாரு

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon