மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

சிரிப்பில் காணாமல் போன வறுமை!

சிரிப்பில் காணாமல் போன வறுமை!

ஹிப் ஹாப் ஆதி, ஐஷ்வர்யா மேனன், யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரவி மரியா, முனீஷ்காந்த் நடிப்பில்

அறிமுக இயக்குநர் ராணா ஏற்கனவே குறும்படமாக எடுத்து, பெரும் வரவேற்பைப் பெற்ற 'கெக்க பெக்க' படத்தை இப்போது முழு நீள படமாக உருவாக்கி பிப்ரவரி 14 அன்று வெளியிட்டிருக்கின்றனர்.

குஷ்பூ தயாரிப்பில் தயாராகி வெளியான மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஹிப் ஆப் ஆதி. அந்தப் படம் கமர்ஷியலாக தமிழகத்தில் 8 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றி பெற்றது. அவர் நடித்த இரண்டாவது படத்தையும் ‘நட்பே துணை’ என்கிற பெயரில்  குஷ்பூ  தயாரித்து வெளியிட்டார். அந்தப் படமும் தமிழகத்தில் 10 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்து வெற்றி பெற்றது. இந்நிலையில் "நான் சிரித்தால்" மூன்றாவது படமும் குஷ்பூ தயாரிப்பில் வெளியாகி தமிழகம் முழுவதும் 450 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 800 திரையரங்குகளிலும் வெளியானது . இப்படத்தை ராக்ஃபோர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்

ஜனவரி முதல் கடந்த வாரம் வரை ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் ,தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ்,

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ ஆகிய படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டியது. மற்ற படங்கள் அனைத்தும் வந்த வேகத்தில் திரையரங்குகளை விட்டு வெளியேறின.

இப்படி திரையரங்குகளை வறுமை சூழ்ந்திருந்த வேளையில், நான் சிரித்தால் திரைப்படம் வெளியாகி வசூல் வறுமைக்கு முடிவுரை எழுதியிருக்கிறது. படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வந்தபோதும் வசூல் ரீதியாக முதல் நாள் தமிழகம் முழுவதும் 450 திரைகளில் சுமார் 3.50 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் இந்தப் படம் இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு மொத்த வசூல் செய்திருப்பதாக விநியோகஸ்தர் வட்டாரம் தெரிவிக்கிறது.

-இராமானுஜம்

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon