மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

விராட் கோலி மீது லட்சக்கணக்கான கேமரா!

விராட் கோலி மீது லட்சக்கணக்கான கேமரா!

மிகவும் சொகுசான டி20 வெற்றிக்குப் பிறகு, கடினமான ஒருநாள் தொடரில் தோல்வியைக் கண்டிருக்கிறது இந்திய அணி. அடுத்து டெஸ்ட் போட்டி. இந்திய அணி என்னவாகப் போகிறது என்ற தவிப்பில் ரசிகர்கள் காத்திருக்க, இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி வழக்கம்போலவே தனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது மிகவும் அப்செட்டாகவே காணப்பட்டிருக்கிறார் விராட் கோலி. காரணம், இந்திய அணியின் சொதப்பலான ஓப்பனிங்கும் அதிலிருந்து மீண்டு வந்ததும் எடுக்கப்பட்ட பெருமூச்சும் தான். 38 ரன்கள் எடுப்பதற்குள் மளமளவென நான்கு விக்கெட் விழுவது கிரிக்கெட் வரலாற்றில் புதிதில்லை என்றாலும், ஒரு விக்கெட் விழும் சமயத்தில் அதன் சீரியஸ் புரியாமல் அடுத்தடுத்த விக்கெட்டை பறிகொடுத்துவிட்டு வந்த இளம் கன்றுகளை என்ன செய்வதெனத் தெரியாமல் இருந்தார் விராட் கோலி. சத்தேஸ்வர் புஜாரா மற்றும் ஹனுமா விகாரி ஆகிய இருவர் இல்லையென்றால், மொத்த இந்திய அணியின் ஸ்கோரும் ஐம்பதுக்குள் அடங்கியிருக்கும். இந்த ஐம்பது ரன்களைவிட விராட் கோலியை அதிகம் பாதித்திருப்பது, உலகளவில் டாப் பேட்ஸ்மேனாக இருக்கும் தனது ஸ்கோர் தான்.

நியூசிலாந்து தொடர் முழுவதுமே விராட் கோலி சிறப்பாக செயல்படவில்லை. ஒரு கேப்டனாக இல்லையென்றாலும், பேட்ஸ்மேனாக தனது பங்கினை இந்திய அணிக்குச் செலுத்தவேண்டிய கடமையை விராட் கோலி தவறவிட்டிருக்கிறார். அதேசமயம், இந்திய அணியின் ஆபத்துதவிகளாகக் கருதப்படும் இரண்டாவது அணியின் பெரும்பாலான வீரர்களைக் களமிறக்கியதன் மூலம் கிடைத்தது தான் நான்கு விக்கெட் அதிர்ச்சி. பவுலிங் ஆர்டரிலும் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா ஆகியோரால் பெரியளவில் சாதிக்கமுடியவில்லை. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியின் பிருத்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் நிலையான ஓப்பனிங்கைக் கொடுத்திருக்கின்றனர். இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 87 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது இந்திய அணி.

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon