மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

இது சிம்புவோட ‘ஒரு குட்டிக் கதை’!

இது சிம்புவோட ‘ஒரு குட்டிக் கதை’!

நேற்று(பிப்ரவரி 14) காதலர் தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படத்தில் இருந்து விஜய் பாடிய ‘ஒரு குட்டிக் கதை’ பாடல் வெளியானது. ரசிகர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்த அந்த பாடல் இணையத்தில் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

“வாழ்க்கை மிகவும் குறுகியது, அதனால் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள், டிசைன் டிசைனா பிரச்னைகள் வந்து போகும் ஆனாலும் கூலாகவே இருங்கள். ஸ்பீடா போனா கவனம் தேவை, ஸ்லோவா போனா ஸ்டெடியும் தேவை” என்று அருண்ராஜா காமராஜாவின் வரிகளுடன் தனது ரசிகர்களுக்கான அன்பு அட்வைஸாகவே விஜய் குட்டிக் கதைப் பாடலைப் பாடியுள்ளார். ‘ஒரு குட்டிக் கதை’ பாடல் வெளியான அதே நேரத்தில் அதே நாளில் இரும்பு மனிதன் திரைப்படத்திற்காக சிம்பு பாடிய ‘டோன்ட் வொர்ரி புள்ளிங்கோ’ பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.

டோன்ட் வொர்ரி புள்ளிங்கோ

தெளிவா நில்லுங்கோ

சேலஞ்சே இல்லாட்டி

லைஃபே போரு-ங்கோ

துட்டெல்லாம் போனாலும்

தூசா ஆனாலும்

நம்பிக்கை விடாம

வாழ்ந்து பாருங்கோ

என்ற வரிகளுடன் அமைந்த இந்தப்பாடலும் அதே போன்ற ஆங்கிலக் கலப்புடன் அமைந்த அட்வைஸ் பாடலாகவே அமைந்துள்ளது.

ஜோசப் பேபியின் தயாரிப்பில் டிஸ்னி என்பவர் ‘இரும்பு மனிதன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். கே.எஸ்.மனோஜ் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தில் சிம்பு பாடியுள்ள Don't worry Pullingo பாடலை நிரஞ்சன் பாரதி எழுதியுள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon