மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

டிக் டாக்: கொஞ்சம் இலக்கணம் கத்துக்கலாமா?

டிக் டாக்: கொஞ்சம் இலக்கணம் கத்துக்கலாமா?

‘ஃபோனும் கையுமா டிக் டாக்கே பாத்திட்டு இருக்கியே, எப்போ தான் படிப்ப?’ என்று அக்கரையுடனோ அல்லது கோவமாகவோ பலரும் பலரிடமும் கேட்டுப் பார்த்திருப்போம்.

‘டிக் டாக்கில படிச்சிட்டு தான் இருக்கேன்’ என்ற பதில் அவர்களுக்குக் கிடைத்தால் நிச்சயம் அதை நம்ப மாட்டார்கள். பொழுது போக்கிற்கான, ஆடல் பாடலுக்கான ஒரு தளம் எப்படி பாடம் கற்றுத்தரும் என்பது மிகப்பெரிய ஒரு கேள்வியாக அங்கு எழும். ஆனால் உண்மை என்னவென்றால் டிக் டாக் பாடலும் கற்றுத்தரும், பாடமும் கற்றுத்தரும்.

யூட்யூப் போன்றே சிலர் கல்வி சார்ந்த வீடியோக்களைத் தொடர்ந்து டிக் டாக் தளத்தில் பதிவேற்றி வருகின்றனர். கணித வாய்ப்பாடுகளை எளிமையாகக் கற்றுக் கொள்ளும் வழிமுறைகள், பெரிய ஃபார்முலாக்களை மனதில் நிற்க வைக்கத் தேவையான டெக்னிக்குகள், அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான எளிய செயல்முறை விளக்கம், பெரிய ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பு என்று கற்றுக் கொள்வதற்கும் ஏராளமான விஷயங்கள் இங்கு இருக்கின்றன.

ஆங்கிலம் ஒரு மொழி தான், அதைக் கற்றுக் கொள்வது எளிமையானது தான் என்றாலும் பலருக்கும், அதைக் கற்றுக் கொள்வதில் பல குழப்பங்கள் ஏற்படுகிறது. அதிலும் ஆங்கில இலக்கணம் என்பது மலையேற்றம் போன்ற சிரமத்தை சிலருக்குத் தருகிறது. ஆனால் இலக்கணமோ, இலக்கியமோ எதை வேண்டுமானாலும் எளிமையாகக் கற்கலாம் என்பதை உணர்த்துகிறது ஒரு டிக் டாக் வீடியோ.

@kichuthor

Has been, have been, had been😊❤️ #kichuthor #tamil #english #edutok #edutoktamil #teaching

♬ original sound - 🔥❤️Kichu Thor🔨⚡

'Has been', 'Have been', 'Had been' ஆகிய மூன்றிற்கும் என்ன வித்தியாசம், எதை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை மிக எளிமையாக அந்த வீடியோ விளக்குகிறது. பார்வையாளர்களைக் கவர்வதில் மட்டுமின்றி பாடம் கற்றுத் தருவதிலும் இத்தகைய வீடியோக்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

-டிக் டாக் யூஸர்

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon