மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

‘ஆளே இல்லான்னாலும் டீ ஆத்துவோம்’: அப்டேட் குமாரு

‘ஆளே இல்லான்னாலும் டீ ஆத்துவோம்’: அப்டேட் குமாரு

‘90’s கிட்ஸ் எல்லாருமே சிங்கிள்ஸ்னு சொல்லி ஊரு உலகம் நம்மள கலாய்க்குது, இதுக்கு ஒரு முடிவு கட்டணும்னு சொல்லி போலீஸ்ல புகார் கொடுக்கலாம்னு இருக்கேன்’ அப்டீன்னு லவ்வர்ஸ் டே அதுவுமா ஃப்ரெண்ட் ஒருத்தன் பொலம்பிக்கிட்டு இருந்தான். தம்பி, போலீஸே சிங்கிள்னு சொல்லி தான் கலாய்க்கிறாங்க. இதுல யார் கிட்டப் போய் புகார் சொல்லுவண்ணு கேட்டு ‘சிங்கிளா இருந்தாலும் சீட் பெல்ட் போடுங்க’ மீம்-அ அவன்கிட்ட காட்டினேன். ஹ்ம்ம்ம்...னு இழுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டவன், ‘அதில சொல்ற மாதிரி பொறுப்பா இருந்தா, நமக்கும் பொருத்தம் கிடைக்கும் தான்’னு நம்பிக்கையா சொன்னான். டீ குடிச்சிட்டு இருந்தவன் கிட்ட ‘நியூஸ் பாத்தியாடா, இனிமே பஸ்ல எல்லாம் சிசிடிவி கேமரா வைக்கப் போறாங்களாமே. இனிமே எல்லாரும் பாதுகாப்பா ட்ராவல் பண்ணலாம் இல்லே’ன்னு கேட்டா, ‘அவ்வளவு பெரிய முதலமைச்சரையே சிசிடிவியால பாதுகாக்க முடியல. அங்கயே வேலை செய்யாதது. இங்க மட்டும் வேலை செய்யுமா என்ன?’ அப்டீன்னு கேக்குறான். தெரியாம வாயக் கொடுத்து மாட்டக் கூடாதுன்னு நெனச்சு, டீக்கடை அண்ணா கிட்ட ‘யாருக்கு டீ போடுறீங்க அண்ணா’னு கேட்டேன். ‘ஆளே இல்லான்னாலும் டீ ஆத்துவோம். கடமை முக்கியம் குமாரே....’ன்னு பதில் சொல்றாரு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் கிளம்புறேன்.

கோழியின் கிறுக்கல்!!

திருமணமானவன் எவனாவது காதலர் தினம் கொண்டாடுவானா!?

என்னங்க அங்க சத்தம்!?

இல்லமா, நமக்கு தினம் தினம் காதலர் தினம் தானேன்னு சொல்லிட்டு இருந்தேன்!!

ரஹீம் கஸ்ஸாலி

டயர் இல்லாத திமுக எனும் காரை ஓட்ட வந்துள்ளார் பிரசாந்த் கிஷோர்!- பொன்னார்.

அவங்களிடமாவது டயர்தான் இல்லை. உங்களிடம் காரே இல்லையே...?!

ரஹீம் கஸ்ஸாலி

ஆஸ்கார் தேர்வு கமிட்டியில் நம்ம டி.என்.பி.எஸ்.சி. ஆட்களை உட்கார வைத்துவிட்டால் கமிஷன் வாங்கிட்டு ஆஸ்காருக்கு பரிந்துரைப்பார்கள்.

மித்ரன்

அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா அமைக்க பட்ஜெட்டில் 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு - செய்தி

அப்படியே அரசு பேருந்துல பயணிப்பவர்களுக்கு குடை வாங்க நிதி ஒதுக்குங்க..?! 😁

சரவணன். ℳ

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக

சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்ற வாதத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.

அது சரி, தீர்ப்பு எப்போ சொல்வாங்க...?

கோழியின் கிறுக்கல்!!

ரஜினியின் அரசியல் பிரவேசமும்,

சிம்புவின் சினிமா ரிலீஸும் ஒன்று தான் போல!!

அறிவிப்புகள் மட்டும் வந்து கொண்டே இருக்கு!!

ச ப் பா ணி

காதல் மிக புனிதமானது

நம் பிள்ளைகளுக்கு வராத வரை

மெத்த வீட்டான்

குரூப் தேர்வுன்னா குரூப்பா கொள்ளையடிக்கிறது என மாத்தி வச்சுருக்காங்க !

RASIGAN KRK

'பைக் கேரியரில் மாட்டி இருந்தது!' என்று ஹெல்மைட்டை கொடுத்தார் இன்ஸ்பெக்டர், மார்ச்சுவரியில் வைக்கப்பட்டவனின் மனைவியிடம்.

தமிழன்டா

3 மில்லியன் "டன்"னில் இருந்து 5 மில்லியன் "டன்"னாக பொருளாதாரம் உயரும் - அமித்ஷா

பொருளாதாரத்தை "டன்" கணக்குலயா அளப்பாங்க

குழந்தை. செல்வா

இன்று நீங்கள் லவ்வர்ஸ் டே கொண்டாடுவது எங்களுக்கு முக்கியம் இல்ல..

அடுத்த வருசமும் அதே ஆள்கூட லவ்வர்ஸ் டே கொண்டாடுவீங்களா என்பதே இங்கு முக்கியம்..

-நாங்கமொரட்டுசிங்கிள்

அன்பே சிவம்

ஏமாற்றிவிட்டு சென்றவர்களுக்கே ஒரு வாழ்க்கை அமையும் போது...

அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொண்டவர்களுக்கு

ஒரு வாழ்க்கை அமைந்துவிடாதா என்ன...!

Dr.Aravind Raja

சிலிண்டர் விலையை 147 ரூபாய் கூட்டுனதால.. இந்தியாவுல இருக்குற பாகிஸ்தான் தீவிரவாதிங்க சமைக்க முடியாம பட்னி கிடந்து சாவ போறாங்க..

ராஜ தந்திரம் ஜி

படிக்காதவன்

சாப்டலனாக்கூட

சரின்னு போய்

பொழப்ப பாக்கலாம் போல

இந்த ஃபோன் ல

30 பாய்ண்ட் தான்

சார்ஜ் இருக்கு

என்னமோ பர்ஸ்ஸ

பறி கொடுத்த மாதிரி

மனசு படபடங்குது...

என்னத்த சொல்ல

மாஸ்டர் பீஸ்

விஷயமெல்லாம் ஏதுமில்லை சும்மாதான் பேசலாம்னு போன் பண்ணேன் என அன்பை சுமந்து வரும் தொலைபேசி அழைப்புகள்தான் எவ்வளவு அழகானவை!

-லாக் ஆஃப்

குமாரு

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon