மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

விஜய் சேதுபதி சந்திப்பு: 96 பார்ட் 2 ரெடியாகிறதா?

விஜய் சேதுபதி சந்திப்பு: 96 பார்ட் 2 ரெடியாகிறதா?

தலைப்பை நீங்கள் சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள். 96 திரைப்படத்தின் இயக்குநர் பிரேம்குமாரை, நடிகர் விஜய் சேதுபதி சந்தித்திருப்பது இணையத்தில் அனல் காற்றைக் கிளப்பியிருக்கிறது. 96 திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா என்ற கேள்வியைக் கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

96 திரைப்படம் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. விஜய் சேதுபதி-த்ரிஷா-பின்னணி இசை-பாடல்-காட்சியமைப்பு என எதைப் பார்ப்பது, எதை விடுவது என்ற குழப்பத்திலும் திருப்தியிலுமாக படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் வந்துவிட்டனர். ஆனால், அடுத்த பாகம் எடுப்பார்களா என்ற கேள்வி எழுந்தபோது ரசிகர்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனாலேயே, 96 திரைப்படத்தின் நடிகரான விஜய் சேதுபதியும், இயக்குநரான பிரேம் குமாரும் சந்தித்துக்கொண்டதை பரபரப்பாக பேசிவருகிறது இணைய உலகம்.

பிரேம் குமாரின் வீட்டுக்கு மதிய உணவுக்குச் சென்ற விஜய் சேதுபதி, பிரேமின் வீட்டிலிருக்கும் த்ரிஷா என்ற பூனையுடன் எடுத்த ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த ஃபோட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் பிரேம் ‘த்ரிஷா-விஜய்சேதுபதி-96 மூவி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனால் 96 திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா என பிரேம்குமாரை ரசிகர்கள் கேள்விகளால் துளைத்துவருகின்றனர்.

View this post on Instagram

#trishathecat #trisha #vijaysethupathi #96themovie

A post shared by C. Premkumar (@premkumardop) on

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon