மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

விஜய் VS சிம்பு: வெல்லப்போவது யார் குரல்?

விஜய் VS சிம்பு: வெல்லப்போவது யார் குரல்?

மாஸ்டர் திரைப்படத்திற்காக விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டிக் கதை’ பாடல் இன்று(பிப்ரவரி 14) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. அதே நாள், அதே நேரத்தில் நடிகர் சிம்பு பாடியுள்ள மற்றொரு பாடலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-விஜய் சேதுபதி நடித்துவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துவரும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தநிலையில் இன்று(பிப்ரவரி 14) காதலர் தினத்தை முன்னிட்டு படத்தில் இடம்பெறும் ‘ஒரு குட்டிக் கதை’ என்னும் பாடலை வெளியிட உள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்தனர்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப்பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார் என்ற செய்தி ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியது. விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டிக் கதை’ப் பாடலைக் கேட்க ரசிகர்கள் அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அந்த பாடல் வெளியாகும் அதே நேரத்தில் நடிகர் சிம்பு பாடிய மற்றொரு பாடலும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோசப் பேபியின் தயாரிப்பில் டிஸ்னி என்பவர் இயக்கியுள்ள திரைப்படம் ‘இரும்பு மனிதன்’. வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் இன்று வெளியாகவுள்ளது. இன்று வெளியாகவிருக்கும் ‘டோண்ட் வொர்ரி புள்ளிங்கோ’ என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார்.

இந்தப் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களை அதிகம் கவரப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon