மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

ரைஸாவின் காதலன் யார்? ஓவியா வெளியிட்ட வீடியோ!

ரைஸாவின் காதலன் யார்? ஓவியா வெளியிட்ட வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் ரைஸா வில்சன்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் மூலம் அறிமுகமான ரைஸா தொடர்ந்து கதாநாயகியாக நடித்துவந்தார். தற்போது விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கும் FIR படத்திலும், ஜி.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து ‘காதலிக்க யாருமில்லை’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னதாக ரைஸா, ‘தமிழக மக்களை மகிழ்ச்சிப் படுத்த நான் ஹரீஷ் கல்யாணை டேட்டிங் செய்ய விரும்புகிறேன்’ என்று தெரிவித்திருந்தார். அந்த செய்தி இணைய உலகில் பலராலும் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் காதலர் தினமான இன்று(பிப்ரவரி 14) தனது காதலர் யார் என்பதை வெளிப்படுத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

அது தொடர்பாக, நடிகர் ஜி.வி.பிரகாஷ், நடிகை ரெபா மோனிகா ஜான், சின்னத்திரை நடிகையும் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர் கணேஷின் மனைவியுமான நிஷா கணேஷ் உள்ளிட்டோர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் ரைஸாவின் காதலர் யார் என்பதை அறியக் காத்திருப்போம் என்பதாக அவர்கள் தெரிவித்திருத்துள்ளனர்.

அதே போன்று, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரது மனதையும் வென்ற நடிகை ஓவியாவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. நிஜமாகவே ரைஸா தனது காதலர் குறித்து வெளிப்படுத்துவாரா? இல்லை இது ஏதேனும் திரைப்படத்திற்கான புரொமோஷனா? என்னும் சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 14 பிப் 2020