மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

வைரல் லிஸ்டில் முதல்வரின் டிக் டாக் வீடியோ!

வைரல் லிஸ்டில் முதல்வரின் டிக் டாக் வீடியோ!

சாதாரண மனிதர்கள் மட்டுமின்றி முன்னணி நடிகர்கள், பிற பிரபலங்கள் எனப் பலரும் கூட டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில் இயங்கி வருகின்றனர்.

கடை திறப்பு விழாக்கள், முக்கிய நிகழ்ச்சிகள், பிற அரசியல் கூட்டங்கள் என நடக்கும் போது சில முக்கிய மனிதர்களின் முக்கியமான தருணங்களை சாதாரண மனிதர்களின் கேமரா கண்கள் படம்பிடித்து, உலகறியச் செய்துவிடுகிறது. இதில் தமிழக முதலமைச்சரும் விதிவிலக்கல்ல என்பதை உணர்த்தும் விதமாக டிக் டாக்கில் வீடியோ ஒன்று வலம் வருகிறது.

சமீபத்தில் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 16 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அவர் தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே அவர் சென்றுகொண்டிருந்தபோது முதல்வரைக் காண அங்கு காத்திருந்த சில குழந்தைகள், அவரைப் பார்த்து கையசைத்தனர். திடீரென ஓட்டுநரிடம் காரை நிறுத்தச் சொல்லி அந்த குழந்தைகளை அருகில் அழைத்து மகிழ்ச்சியுடன் இனிப்புகள் வழங்கினார்.

கைநிறைய சாக்லேட்டுகள் கிடைத்த சந்தோஷத்தில் இருந்த குழந்தைகளையும், அவர்களுக்கு குழந்தைச் சிரிப்புடன் இனிப்பு வழங்கிய தமிழக முதல்வரையும் யாரோ ஒருவர் தனது செல்ஃபோனில் வீடியோவாக எடுத்திருந்தார். அந்த வீடியோவை அவர் டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துகொண்டார்.

@thambidhuraitd

the great முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 🙌🏼🙌🏼👏🏼👏🏼😍 #tngoverment #CM #tamilnadu #Edappadi #Palaniswamy #Tamilnaducm #Tncm #People #Love

♬ original sound - user47940553

மக்களுடன் மக்களாக முதல்வர் எளிமையாக இருக்கிறார் என்று அந்த வீடியோவைப் பார்த்த பலரும் முதல்வரை பெருமையுடன் பாராட்டி வருகின்றனர்.

-டிக் டாக் யூஸர்

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon