மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 4 டிச 2020

இப்டியெல்லாமா ‘கிஸ் டே’ செலிபிரேட் பண்றது? :அப்டேட் குமாரு

இப்டியெல்லாமா ‘கிஸ் டே’ செலிபிரேட் பண்றது? :அப்டேட் குமாரு

பிப்ரவரி 14 ஒரு நாள் தானடா வாலண்டைன்ஸ் டே. நீங்க என்னடான்னா வாரம் முழுக்க கொண்டாடுறீங்களே என்ன சங்கதின்னு மில்லினியல் கிட் ஒருத்தனைப் புடிச்சி கேட்டேன். உங்களுக்கெல்லாம் வயசாகிடுச்சு ப்ரோ. நாங்களாம் ஜாலியா திருவிழா மாதிரி செலிபிரேட் பண்ணுவோம்னான். சரி, இன்னைக்கு என்னடா பண்ணுவீங்கன்னா காதல் ஜோடிகள் முத்தம் குடுத்துக்குற நாள் அப்டின்னான். ஏண்டா மத்த நாளெல்லாம் சும்மாவேவா இருப்பீங்கன்னு கேட்டா ‘கல்யாண நாள்னு ஒண்ணு செலிபிரேட் பண்றீங்களே. மத்த நாளெல்லாம் பொண்டாட்டியை அடிச்சு தொரத்திவிடுறீங்களா என்ன? இல்லைல, அந்த மாதிரி தான். எல்லா நாளும் உண்டு. ஆனா, என்ன இன்னைக்கு கொஞ்சம் உக்கிரமா இருப்பொம்னான். இந்தா பாரு உன்னை மாதிரி உக்கிரமானவன் செஞ்ச வேலையைன்னு மேல வெச்சிருக்க ஃபோட்டோவை காட்னேன். ப்ரோ, டேட்டிங் போற மூடையே கெடுத்துட்டீங்களேன்னுட்டு வீட்டுக்குள்ள போய்ட்டான். யாரோ ஒருத்தரு கிஸ் டே பத்தி தப்பா புரிஞ்சு வெச்சிருந்தா நான் என்னடா பண்ணுவேன்னு கிளம்பி வந்துட்டேன். நீங்களே நியாயத்தை சொல்லுங்க பிரெண்ட்ஸ். நான் அப்பாலைக்கா வர்றேன்.

Mannu

மேடையில் பேசும் போது கை தட்டுபவர்களும், செல்ஃபி எடுக்க வந்தவர்களும், போஸ்ட்க்கு லைக்ஸ் போடுபவர்களும் நமக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்று நம்பும் மனசு தான் சார் கடவுள்.

Arunan Kathiresan

"ஈவெரா தலித் விரோதி": எச் ராஜா.

இவர் தலித் ஆதரவாளர்! சங்கரமடத்தின் அடுத்த  வாரிசாக ஒரு தலித் பிள்ளையை ஏற்கணும்னு இதோ போராட்டத்துக்கு கிளம்பிட்டாரு!

ஆஹான்!!

காதலர் தினம் கொண்டாட தோழி இல்லையே, கறிக்கொழம்பு திங்க கோழி இல்லையேன்னு கண்ணக் கசக்கிட்டு வருவானுங்க ஆண்டி.. உள்ள வுட்ராதீங்க!

சிலந்தி™

"என்ன பார்த்தா காதுல ஹெட்செட் மாட்டிட்டு திரியறவன் மாதிரி தெரியுதா"??

என்று கேட்கும் நாள் தொலைவில் இல்லை..!!

கப்பல் வியாபாரி

கப்பல் வியாபாரி: அரேஞ்ச்ட் மேரேஜ் பண்ணவங்களும் லவ்வர்ஸ் டே கொண்டாடுவாங்களா?

Priya: வீட்ல எதும் கிப்ட் வேணும்னு கேட்டாங்களா?

கப்பல் வியாபாரி: இப்ப வரைக்கும் இல்ல. ட்விட்டர் பேஸ்புக்னு இவங்க வேற நமக்கு ப்ரஷர் குடுக்கிறாங்க

Zen Selvaa

டெபாசிட் வாங்கவே 1.5 லட்சம் ஓட்டு வாங்க வேண்டிய நாடாளுமன்ற தேர்தல்ல போட்டியிட்ட கமல்,

வெறும் 1000 ஓட்டு வாங்கினாலே ஜெயிச்சுடலாம்ன்ற உள்ளாட்சி தேர்தலை ஏன் புறக்கணிக்கனும்..?

கமல் நாடாளுமன்ற தேர்தல்ல போட்டியிட்டதுக்கும், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிச்சதுக்கும் பல காரணங்கள் இருக்கு.

கோழியின் கிறுக்கல்!!

"உங்க இஷ்டம்" என்று மனைவி கூறிவிட்டால், கணவன் தன் இஷ்டத்தை குழி தோண்டி புதைத்து விட வேண்டும் என்று பொருள்!!

dazZ

விஜய் சேதுபதியலாம் முதல்ல மறவர்னு சொன்னானுங்க..பெரியார பத்திலாம் பேசுனதுக்கு அப்றம் தெலுங்கு வந்தேறின்னானுங்க.. மத்திய அரச கண்டிச்சதும் இப்ப கிறிஸ்தவ கை கூலியா மாத்தியிருக்கானுங்க.

ஜோக்கர்

மத்தவங்க மனசு வருத்தப்படக்கூடாது ன்னு நினைச்சு உங்க உரிமையை விட்டு கொடுத்து போகாதீங்க,

அப்புறம் "விட்டுக்கொடுத்து போறதே" உங்க உரிமையா மாறிரும்..!!!

Ganesh KKR

மக்களின் வாக்களிக்கும் நிலையில் தெளிவான முடிவெடுக்கும் தன்மை முன்னேற்றம் கண்டிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. தேசியக் கட்சிகளின் முன் உள்ள மிகப் பெரிய சவால் என்பது மாநிலத்தில் தன்னாட்சி அதிகாரம் மிக்க தலைவரையும் அவருக்கான அதிகாரத்தையும் முனைவது தான்.

Pachai Perumal.A.

மனைவியின் பிறந்தநாளுக்கு புடவை எடுக்க மனைவியுடன் கடைக்கு செல்லும் கணவர்களின் உடல்மொழி குலதெய்வ கோவிலுக்கு அழைத்து செல்லப்படும் ஆட்டுக்குட்டியை போலவே இருக்கிறது.

தாறுமாரு அருள்

தமிழகத்தில் மோடியின் பருப்பு வேகாது -உதயநிதி

எடப்பாடியார்_நவ் 10 வருடத்திற்கு உங்க பருப்ப வேகாம தானே வச்சிருக்கோம் சும்மா போவியா அங்குட்டு

-அப்டேட் குமாரு லாக் ஆஃப்.

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon