மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 24 பிப் 2020

கே.ஜி.எஃப்: ரவுடி லேடியை ஸ்டைலாக வரவேற்ற ராக்கி

கே.ஜி.எஃப்: ரவுடி லேடியை ஸ்டைலாக வரவேற்ற ராக்கி

கே.ஜி.எஃப் திரைப்படத்தின் முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பினால், அதன் இரண்டாம் பாகம் இந்திய அளவில் பேசப்படும் திரைப்படமாக மாறியிருக்கிறது. பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தாங்களாகவே முன்வந்து இரண்டாம் பாகத்தில் சேர்ந்துவிட வெளிப்படுத்திய ஆர்வம் அந்தப்படத்தின் மார்க்கெட்டைப் பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. எனவே, இந்தப்படத்தில் ரவீனா தண்டன் இணைந்ததில் ஆச்சர்யமில்லை. ஆனால், படக்குழுவைப் பொறுத்தவரையில் இந்தப் படத்தில் சேரும் ஒவ்வொருவரையும் மிகப்பெரிய சொத்தாகவே பார்க்கின்றனர். இதனை, ஒவ்வொரு கேரக்டர் இணையும்போதும் அவர்கள் கொடுக்கும் வரவேற்பிலிருந்தே அறிந்துகொள்ள முடிகிறது.

கே.ஜி.எஃப்-இரண்டாம் பாகத்தில் இணைந்திருக்கும் ரவீனா தண்டன், ராமிகா சென் என்ற கேரக்டரில் நடிக்கிறார். இந்த அறிவிப்பை வெளியிட்டபோது ‘மரண அறிவிப்பை வெளியிடும் பெண்ணான ராமிகாவை வரவேற்கிறோம்’ என்று இயக்குநர் கூறினார். இப்போது ஷூட்டிங்கில் சேர்ந்திருக்கும் ரவீனாவை வரவேற்கும் விதமாக, அத்திரைப்படத்தின் ஹீரோவான யாஷ் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

யாஷ் பதிவு செய்த புகைப்படத்தின் தலைப்பில் “ராக்கியின் எல்லைக்குள் ராமிகா வேண்டுமென்றால் அனுமதிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால், யாஷின் தாய் நிலத்தில் ரவீனா மேடம் கண்டிப்பாக வரவேற்கப்படுகிறார்” என்று மிகவும் பணிவுடனும், ராக்கி கேரக்டரையும், யாஷின் கேரக்டரையும் சேர்த்து ஒரு வரவேற்பினைக் கொடுத்திருக்கிறார்.

கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் மிக முக்கிய கேரக்டராகக் கருதப்படும் ஆதீராவாக சஞ்சய் தத் நடிக்கிறார். ஆதீரா கேரக்டரின் கேங்கில் இடம்பெறும் ‘ரவுடி லேடி’யாக ரவீனாவின் கேரக்டரான ராமிகா இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

View this post on Instagram

Ramika Sen may not be welcome to Rocky's territory.. but Raveena Ma'am is definitely more than welcome to Yash's hometown!! 😃 It's a pleasure having you onboard ma'am !! Let's have a blast 👍

A post shared by Yash (@thenameisyash) on

-சிவா

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon