மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

லாஸ்லியா-அபிராமி ஒரே படத்தில்!

லாஸ்லியா-அபிராமி ஒரே படத்தில்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமான லாஸ்லியா மற்றும் அபிராமி ஆகிய இருவரும் ஒரே திரைப்படத்தில் நடிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லாஸ்லியா, தமிழகத்தின் செய்தி ஊடகங்களில் சில மாதங்கள் செய்தியாக மாறிப்போனார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்தியதன் மூலம் பிரபலமடைந்திருந்த அதே நேரத்தில், நேர்கொண்ட பார்வையின் மூலமாக தனது திறமைகளை வெளிப்படுத்தியவர் அபிராமி. இந்த இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயே நல்லதொரு கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தியிருக்க, இப்போது திரைப்படத்திலும் ஒன்றிணைந்து மக்களை பொழுதுபோக்க தயாராகிவிட்டனர்.

நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் ஆரி, அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் லாஸ்லியா-அபிராமி-ஸ்ருஷ்டி டாங்கே ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப் படத்தில் லாஸ்லியா கமிட் ஆகியிருக்கும் செய்தியை, ஹர்பஜன் படத்தில் இணைந்த அதேநாளில் வெளியிட்டு தமிழ் சினிமாவில் தான் காலூன்றிவிட்டதை மக்களுக்குத் தெரியப்படுத்தினார். இந்நிலையில், ஆரியின் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பட நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட வீடியோவில் லாஸ்லியா-அபிராமி-ஸ்ருஷ்டி ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து ஆரியை வாழ்த்தியிருக்கின்றனர். அந்த வீடியோவில் பிக் பாஸ் மாடலில் மூன்று நடிகைகளுக்கு அறிமுகம் கொடுத்து நீங்கள் அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேள்விக்கு மூவரும் ஆரியின் படத்தில் நடிக்கும் அறிவிப்பை வெளியிட்டதுடன், தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

View this post on Instagram

A very happy birthday to @aariarujunaactor , you are an amazing friend with a good heart . May god pour his love and warmth on you in all walks of life .... #hbdaariarujuna.... and yessssss m so glad to announce that IL be sharing screen space with this amazing talent and my beloved cute lil angel @losliyamariya96 and the dimple queen @srushtidangeoffl ... 2020 love you for all the good news you are giving me ...... thanks to my director Albert and buddy @aariarujunaactor for giving me this opportunity.... wait for the title fam 💋 it’s gonna be fun... can’t wait for the first look ♥️

A post shared by Abhirami Venkatachalam (@abhirami.venkatachalam) on

-சிவா

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon