மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

டிக் டாக்:நகம் என்னும் ‘ஓவியக்களம்’!

டிக் டாக்:நகம் என்னும் ‘ஓவியக்களம்’!

பலருக்கும் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அலாதி ஆசை இருக்கும். மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்பதைப்பற்றி கவலைப்படாமல் தங்களது சுயத்தை கொண்டாடுவதில் அவர்களுக்கு முழு ஈடுபாடு இருக்கும்.

என் கண்கள் நன்றாக இல்லை, மூக்கு சரியாக இல்லை என்று கூறி குறைபட்டுக் கொண்டவர்கள், இன்று அழகு சாதனப்பொருட்களின் உதவியுடன் தங்களை மேலும் அழகாக்கி தன்னம்பிக்கையுடன் நிற்கிறார்கள்.

கண், மூக்கு, முகம், உடல், உடை என்று அனைத்திலும் மாற்றம் கொண்டுவர மேக்கப்பால் முடிகிறது. சிறிய சிறிய நுணுக்கமான விஷயங்களில் கூட அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். அவற்றில் மிக முக்கியமான, கவனிக்கத்தக்க ஒரு விஷயம் நகங்களில் செய்யும் அழகு ஒப்பனை.

@ngothithanhhang333

♬ Nắm - Hương Ly, Minh Vương

கைகளில் வளரும் நகங்களை பலரும் தேவையற்ற ஒன்றாக நினைத்து வெட்டி எறிந்து விடுகிறார்கள். பலர் அதைப் பற்றி கவலைப்படுவது கூட இல்லை. ஆனால் எதையும் அழகுபடுத்தலாம் என்பதையும், நகங்கள் கூட முக்கியமானவை தான் என்பதையும் உணர்த்தும் விதமாக சில கலைஞர்கள் வேலை செய்கிறார்கள். யூட்யூப், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் சாதாரணமாகவே இத்தகைய வீடியோக்கள் நம்மால் பார்க்க முடியும். இவற்றில் சிலவற்றைப் பார்க்கும்போது, அழகு ஓவியங்களை நாம் ரசிப்பது போன்று மெய்மறந்து ரசிக்க வைக்கிறது.

@ngothithanhhang333

♬ nhạc nền - Nguyễn Hương Ly

டிக் டாக் உலகிலும் இத்தகைய சில வீடியோக்கள் வலம் வருகின்றன. ஒவ்வொரு வீடியோவும் மில்லியன் கணக்கான லைக்குகளையும், ஆயிரக்கணக்கான ஷேர்களையும் பெறுவதில் இருந்தே அவை எந்த அளவு ரசிக்க வைக்கிறது என்பதை நம்மால் உணரமுடிகிறது.

-டிக் டாக் யூஸர்

வியாழன், 13 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon