மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 ஜன 2020

இதுக்கெல்லாமா ஒரு கோடி அபராதம்?

இதுக்கெல்லாமா ஒரு கோடி அபராதம்?

ஒரு நடிகருக்கு அபராதம் விதித்துப் பார்த்திருக்கிறோம். அதற்காகச் சொல்லப்பட்ட காரணங்கள் ஓரளவுக்கு ஏற்கக்கூடியதாக இருக்கும். ஆனால், படத்தின் ஒப்பந்தத்தை மீறி முடி வெட்டியதன் விளைவாக மலையாளத் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் ஷேன் நிகம்முக்கு ரூபாய் ஒரு கோடி அபராதம் விதித்துள்ளது.

சென்ற வருடம் சூப்பர் ஹிட்டான ‘கும்பலங்கி நைட்ஸ்’ எனும் மலையாளத் திரைப்படத்தில் நடித்த ஷேன் நிகம்முக்கு, இனி திரைப்படங்களில் நடிப்பதற்கு வாழ்நாள் தடை விதித்திருந்தது தயாரிப்பாளர் சங்கம். இஷ்க், ஈடா, போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து மலையாள திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்த நிலையில், இவர் வெயில், உல்லாசம் என்ற படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவந்தார். கருத்து வேறுபாட்டால் சரியாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்த ஷேன் நிகம், ஏற்கெனவே இந்தப் படங்களுக்காக முடி வளர்த்த நிலையில், அந்த கெட்டப்பை மாற்றி தன் அடுத்த படத்துக்காக முடியை வெட்டிக்கொண்டார்.

இதனால் கோபமடைந்த இந்தப் படங்களின் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுக்க, அவர்களும் ஷேனிற்கு நடிக்க தடை விதித்தனர். இதைத்தொடர்ந்து ஷேன், கேரள நடிகர் சங்கத்தின் மூலமாக இந்தச் சிக்கலை தீர்க்க நினைத்து முறையிட்டார். நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால், நீங்கள் செய்யாமல்விட்ட டப்பிங் உள்ளிட்ட சில வேலைகளை முடித்துக்கொடுத்தவுடன் மற்ற படங்களில் நடிக்கலாம் என்று இந்தப் பிரச்சினைக்கு ஆலோசனை கூறினார். இதன் பின்னரும் சம்பளப் பாக்கி உள்ளதால் படப்பிடிப்பில் சரியாக கலந்து கொள்ளாமல் இருந்தார் ஷேன்.

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

3 நிமிட வாசிப்பு

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து! ...

9 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

வியாழன் 30 ஜன 2020