மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 ஜன 2020

மீண்டும் பாலிவுட்டுக்கு செல்லும் தனுஷ்

மீண்டும் பாலிவுட்டுக்கு செல்லும் தனுஷ்

ராஞ்சனா, ஷமிதாப் திரைப்படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வெளியான அசுரன் திரைப்படம் அவரது திரைவாழ்க்கையின் மிகப் பெரிய மைல்கல்லாக மாறியது என்றே கூறலாம். அதனைத் தொடர்ந்து நீண்ட காத்திருப்பிற்குப் பின்னர் வெளியான ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராதபோதும், பொங்கலுக்கு வெளியான பட்டாஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்த நிலையிலும், ‘அசுரன்’ திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால் தனுஷின் மீதான நம்பிக்கை ரசிகர்களுக்கு சற்றும் குறையாமல் இருக்கிறது.

தற்போது பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கர்ணன்’ திரைப்படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் மற்றொரு படத்திலும் தனுஷ் நடித்துவருகிறார். பல கேலி, கிண்டல்களைக் கடந்து ‘சிறந்த நடிகர்’ என்ற அடையாளத்தைப் பெற்று நிற்கும் தனுஷ் தமிழ்த் திரையுலகைத் தாண்டி வேறு மொழிகளிலும் நடித்துவருகிறார். இந்த நிலையில் தனுஷ் நடிக்கவுள்ள மூன்றாவது பாலிவுட் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அந்தப்படத்திற்கு ‘அட்ராங்கி ரே(AtrangiRe)’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அக்‌ஷய்குமார் முதன்மையான வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாரா அலிகான் நடிக்கவுள்ளார். கோடை விடுமுறையை ஒட்டி மே மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ள இந்தத் திரைப்படம் 2021-ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

3 நிமிட வாசிப்பு

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து! ...

9 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

வியாழன் 30 ஜன 2020