மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 ஜன 2020

புக்குல தொடங்கி முள் வரைக்கும் : அப்டேட் குமாரு

புக்குல தொடங்கி முள் வரைக்கும் : அப்டேட் குமாரு

அஞ்சு மணி தாண்டினாலே அலாரம் வச்ச மாதிரி டீயும், டீக்கடை அண்ணாவும் ஞாபகத்துக்கு வந்திடுறாங்க. சரி, போய் எனெர்ஜி ஏத்திட்டு வருவோம்னு டீக்கடைக்கு போனா பெரியவர் ஒருத்தரு அங்க உக்காந்து அழுதிட்டு இருக்காரு. என்ன தாத்தா விஷயம்ணு கேட்டா, ‘இந்த நியூஸ் எல்லாம் பாத்தா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா’னு சொன்னாரு. நான் கூட கொரோனா வைரஸ் பத்தி பயத்தில பேசுறாரோன்னு நெனச்சு விசாரிச்சா, ‘பாவம்பா எங்க ரஜினி அண்ணன், இத்தன நாளா கட்சி ஆரம்பிக்கலைன்னு அவர கலாய்ச்சிட்டு இருந்தாங்க. சரி இப்போவாச்சும் அரசியல்ல தீவிரமா இறங்குவோம்னு நெனச்சு அவரு பேசினா அதுக்குள்ள ஆயிரம் பிரச்னை. துக்ளக், பெரியார், வரிப் பிரச்னைனு பத்தி பேசி முடிக்கிறதுக்குள்ள, கந்து வட்டி கதை. அது வெளிய வந்ததும் தர்பார் படமே நஷ்டம்ன்னு சொல்றாங்க. இது எல்லாம் கூட பரவா இல்லப்பா. காட்டுக்குப் போனா கால்ல முள் கூடக் குத்துது. பாவம்பா அவரு’ன்னு நெஜமாவே ஃபீல் பண்ணி அழுறாரு. ‘சரிங்க. கவலைப் படாதீங்க’னு ஆறுதல் சொன்னா, ‘ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன் தம்பி, நம்ம தமிழ் நாட்டுக்கு எங்க அண்ணா தான் அடுத்த சி.எம் வேணும்னா எழுதி வச்சுக்கோ’னு பெருமையா சொல்றாரு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் எனக்கே ஆறுதல் சொல்லிட்டு வர்றேன்.

ஜோக்கர்

சூ. ஸ்டார் ~ ஏண்டா படத்தில கருப்பு பணத்தைலாம் கண்டு பிடிச்சு நாட்ட காப்பாத்துற மாதிரி நடிச்சேன். அதுக்காக அப்படி இருக்க முடியுமா??!

நிஜத்தில கந்து வட்டிக்கு விட்டுதான்டா வீட்டையே காப்பத்துறேன்.

கோழியின் கிறுக்கல்!!

கறிக்கு "ஆ"வென நெடிலில் திறக்கும் குழந்தையின் வாய், காய்கறிக்கு மட்டும் "அ"வென குறிலில் திறக்கிறது!!

ச ப் பா ணி

சீனாவிலிருந்து யார் வந்தாலும் இனி டாங்லீ மாதிரிதான் பார்ப்பாங்க

ரமேஷ்.ஏ

அண்ணாமல, நீ வட்டிக்கு விட்ட விஷயம் தெரிஞ்ச உடனே தர்பார் படத்தால நஷ்டம்னு கிளம்பி வராங்க பாத்தியா???

விளம்பரத்திற்காக நாடகம் நடிப்பதாக கெஜ்ரிவால் மீது அமித்ஷா கடும் தாக்கு

பதினைந்து லட்சமும் நாமம் வாங்கின மக்களும் படத்தோட டைரக்டர் நீங்க தானே?!

மாஸ்டர் பீஸ்

வயது முதிர்ச்சி ஒருவரின் குணத்தை தீர்மானிக்காது,

தூற்ற தகுதியான பெரியோர்களும் உண்டு,

போற்ற தகுதியான சிறியோர்களும் உண்டு!

கடைநிலை ஊழியன்

மேனேஜர் : ஏன் நேத்து ஆபீஸ் வரல ??

இல்ல.. வர வழியில முள்ளு குத்திருச்சு.

சரவணன். ℳ

"எதுக்குங்க வரி செலுத்தலை...?"

"சிஸ்டம் சரியில்லைன்னு சொன்னா நம்பலையே , அதான் ஆதாரத்தோடு நிரூபிச்சேன்...!"

கோழியின் கிறுக்கல்!!

மனதில் எழும் சோர்வை நீக்க சிலருக்கு ஒரு கட்டிங் தேவைப்படுகிறது!

பலருக்கு ஒரு கோப்பை தேநீர் போதுமானதாக இருக்கிறது!!

அன்புடன் கதிர்™

எட்டி உதைத்தாலும்

ஏற்றிவிட மறுப்பதில்லை

ஏணிகள் !

மாஸ்டர் பீஸ்

அறிவுரை சொல்றவங்க அறிவாளியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை,

அது, வாழ்க்கையில் அவர்கள் வாங்கிய அடி, மிதி அனுபவமாகக் கூட இருக்கலாம்!

SHIVA SWAMY.P

நேரம் சரியில்லாமல் போகலாம்,

ஆனால் வாழ்க்கை அல்ல...

மெத்த வீட்டான்

தனியார் பள்ளிகளில் LKG யில் சேர நுழைவுத்தேர்வு எழுதும்போது 5 ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கூடாதா ? - செங்கோட்டையன்

அப்படின்னா அரசு பள்ளிகளை தனியாரிடமே குடுத்து விடலாமே !

மாஸ்டர் பீஸ்

பசிக்காக வேட்டையாடும் மிருகத்திற்கு ருசியை பற்றிய கவலை அரிதாகக் கூட வராது!

-லாக் ஆஃப்

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

3 நிமிட வாசிப்பு

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து! ...

9 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

வியாழன் 30 ஜன 2020