மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 ஜன 2020

இந்தியா கிரிக்கெட் விளையாட மறுப்பு!

இந்தியா கிரிக்கெட் விளையாட மறுப்பு!

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடரை, பாகிஸ்தானில் நடத்துவதற்கு ஆசிய கிரிகெட் வாரியம் (ACC) முடிவுசெய்துள்ளது. இதற்கு இந்திய அணி சார்பில் பிசிசிஐ பதிலளித்துள்ளது.

ஆசிய கோப்பை தொடர் இந்த முறை பாகிஸ்தானில் நடைபெறுவதால், இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), இந்தியா அதில் பங்கேற்காது என்று தெரிவித்திருந்தது.

பல்வேறு நாடுகள் பங்குபெற்றாலும், இந்திய அணியை பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கு அனுமதிக்கமுடியாது. இதில் பிரச்சனை பாகிஸ்தான் இதனை எடுத்து நடத்துவது என்பதில்லை, இரு அணிகளுக்கும் பொதுவான ஒரு நாட்டில் இந்த போட்டிகளை நடத்துவதை குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி,"இந்திய அணி பங்குபெறாமல் போனால், அந்த தொடர் ஆசிய கோப்பை என்றே கருதப்படாது," என்றார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின்(PCB) தலைவர் வாசிம் கான்," இதற்கு பதிலாக 2020ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் சர்வதேச டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காது," என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆசிய கோப்பை தொடர்களை, அது பங்குபெறாத நாடுகளில் இதற்கு முன்பு நடத்தியது இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதற்கு பதில் கூறிய பிசிசிஐ -யின் மூத்த அதிகாரி, 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய நாட்டிற்குள் வருவதற்கான விசா கொடுக்கப்படவில்லை. எனவே ஐக்கிய அரபு நாடுகளில், பிசிசிஐ அந்த தொடரை நடத்தியது.

இனி அடுத்து நடக்கவுள்ள ஆசிய கோப்பை தொடரை பொதுவான இடத்தில் நடத்துவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

3 நிமிட வாசிப்பு

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து! ...

9 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

வியாழன் 30 ஜன 2020