அடுத்த தலைமுறைக்குப் பாடம் எடுக்க வரும் ‘ராஜவம்சம்’!

சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள ராஜவம்சம் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
காலமாற்றத்தால் காணாமல் போன கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் அவசியத்தைக் கூறும் விதமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ராஜவம்சம்’. அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் டீசர் இன்று ( ஜனவரி 30) வெளியாகியுள்ளது. இந்த டீசரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டனர்.
Here is the teaser of @SasikumarDir starrer #Rajavamsam,all the best to the entire cast &crew.
— A.R.Murugadoss (@ARMurugadoss) January 30, 2020
@kathirvangogh #TDRajha @nikkigalrani #ChendurFilmsInternationalprodn, @actorsathish @manobalam @iYogiBabu @editorsabu @SamCSmusic @dhilipaction @RIAZtheboss https://t.co/3CISZ1hu3f
‘என் ஃபேமிலி அம்பானி ஃபேமிலி இல்லடா, அன்பான ஃபேமிலி’ என்றும் ‘இந்த பூமியில பறவை, மிருகம் கூட கூட்டம் கூட்டமா வாழ்ந்திட்டு இருக்கு. ஆனா மனுஷங்கன்னு சொல்லிக்கிற நாம தான் குடும்பமா, கூட்டமா வாழ மறந்திட்டோம்’ என்றும் டீசரில் இடம்பெறும் வசனங்கள் குடும்பங்களின் தேவையையும், அதில் நிறைந்திருக்கும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ரானி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, விஜயகுமார், தம்பி ராமையா, ரேகா, மனோபாலா, ராஜ்கபூர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.