மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 ஜன 2020

96 காதலர்களுக்காக ஜானு டிரெய்லர்!

96 காதலர்களுக்காக ஜானு டிரெய்லர்!

96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியுள்ள ‘ஜானு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்து வெளியான 96 திரைப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. முதல் காதலின் மறக்கமுடியாத தருணங்களை மீண்டும் நினைவுபடுத்திய அந்தத் திரைப்படம் காதல், நட்பு போன்ற உணர்வுகளை மிக அழகாகக் கடத்தி அனைவராலும் கொண்டாடப்பட்டது. தமிழில் பிரேம் குமார் இயக்கியிருந்த 96 திரைப்படம், பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு உருவானது.

கன்னடத்தில் 99 என்ற பெயரில் வெளியான படத்தில் கணேஷ் மற்றும் பாவனா நடித்தனர். அதே போன்று தெலுங்கில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஜானு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராம் - ஜானுவாக ஷர்வானந்த் - சமந்தா நடிக்கின்றனர். இந்தப் படத்தையும் பிரேம் குமார் இயக்கியுள்ளார். விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் டிரெய்லர் நேற்று (ஜனவரி 29) வெளியானது.

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

3 நிமிட வாசிப்பு

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து! ...

9 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

வியாழன் 30 ஜன 2020