மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 ஜன 2020

டிக் டாக் ‘நிலா காயுது’: ஜானகி என்னும் ஜாலம்!

டிக் டாக் ‘நிலா காயுது’: ஜானகி என்னும் ஜாலம்!

தங்கள் திறமைகளை உலகுக்கு அறிமுகம் செய்ய விரும்பும் நபர்களுக்கான களமாக டிக் டாக் இருக்கிறது. அதே நேரத்தில் இசை, நடனம், நடிப்பு என்று குறிப்பிட்ட துறைகளில் சிறந்த ஆளுமைகளாகத் திகழ்ந்த மேதாவிகளையும் இளைய தலைமுறையினரின் டிக் டாக் உலகம் முற்றிலும் மறந்துவிடவில்லை.

தாங்கள் எத்தனை தீவிர ரசிகர் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும், அந்த ஆளுமைகளைக் கொண்டாடும் விதமாகவும் அவர்கள் குறித்த வீடியோக்களையும் தொடர்ந்து பதிவேற்றி வருகின்றனர். அப்படி ஒரு நபர் தனது டிக் டாக் பக்கத்தில் பதிவேற்றியிருந்த வீடியோ ஆரம்பித்ததும் பதற்றத்தில் ஹெட்போன்கள் இருக்கும் இடத்தைத் தேட வேண்டியதான சூழல் ஏற்பட்டது.

@user303360847807767

S.Janaki Amma Rasigan Ranjith

♬ original sound - Ranjith Chithra

கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த ‘சகலகலா வல்லவன்’ படத்தில் இடம்பெறும் ‘நிலா காயுது நேரம் நல்ல நேரம்’ பாடலின் குறிப்பிட்ட பகுதி அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. ஒருமுறை கேட்டால் நீங்காமல் மனத்தில் ஓடிக்கொண்டே இருக்கும் அந்தப் பாடலைப் பாடியவர்கள் மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.ஜானகி. 1982ஆம் ஆண்டு வெளியான படமும் பாடலும் வெளியாகி முப்பத்தி எட்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்று வரை பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக பாடலுக்கு இடையே வரும் ‘உணர்ச்சி’ ததும்பும் முனகல் சத்தங்களை ஜானகி பாடினாரா என்ற சந்தேகம் பெரும்பாலானவர்களுக்கு இருந்து வந்தது. பல மேடைகளில் நேரடியாகவே அவர் பாடியும் காட்டியுள்ளார். அத்தகைய வீடியோக்களில் ஒன்றை டிக் டாக்கிலும் சிலர் பகிர்ந்துள்ளனர். மெய்சிலிர்க்க வைக்கும் அவரது திறமைக்குப் பலரும் விருப்பங்களையும் தெரிவித்து வருகின்றனர். வெறும் பாடகியாக வந்து பாடல்களைப் பாடி செல்வதோடு மட்டுமல்லாமல் தனது குரலுக்கு உயிர் அளித்து, இசைக்கு உணர்வளித்து ஜானகி பாடும் பாடல்களை யூடியூபிலும் பலரும் தேடிப் பார்த்துக் கேட்கின்றனர்.

ஜாலம் செய்வது போல ஜானகி, ஒரு திரைப்படத்தில் குழந்தையில் குரலில் பாடினார் என்றால் மற்றொன்றில் காதலும் காமமும் ததும்பப் பாடுகிறார். இன்னொரு பாட்டில் தாய்மையின் பெருமைகளை எடுத்து இயம்புகிறார். எத்தனை புதிய செயலிகள் வந்தாலும், எத்தனை உச்சத்தில் தொழில்நுட்பம் சென்றாலும் இவரைப் போன்ற ஆளுமைகளுக்கான கொண்டாட்டங்கள் நிச்சயம் தொடரும்.

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

உடல்நிலை பற்றிய வதந்தி: ஸ்ருதிஹாசன் விளக்கம்!

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

3 நிமிட வாசிப்பு

சந்தானத்தின் ‘குலு குலு’: பெரிய தொகைக்கு வியாபாரம்!

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து! ...

9 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

வியாழன் 30 ஜன 2020