1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்றதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 83 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட்டின் நிஜ ஹீரோக்களாக முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். குறிப்பாக கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங்கும், அவரது மனைவியாக தீபிகா படுகோனும், ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவாவும் நடித்துள்ளனர். கபீர் கான் இயக்கியுள்ள இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி, தீபிகா படுகோன், கபீர் கான், மது மந்தேனா, சஜித் நடியத்வாலா ஆகிய ஐந்து பேர் இணைந்து தயாரித்துள்ளனர்.
#ThisIs83 @ikamalhaasan @kabirkhankk @RKFI @deepikapadukone @Shibasishsarkar @ipritamofficial @vishinduri #SajidNadiadwala @RelianceEnt @FuhSePhantom @vibrimedia @NGEMovies @ynotxworld @sash041075 @APIfilms @ZeeMusicCompany @83thefilm pic.twitter.com/E7kj2IIdD2
— Ranveer Singh (@RanveerOfficial) January 25, 2020
இந்திய கிரிக்கெட் வீரர்களாக அணிவகுத்து நிற்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 83 திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை, கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தின் அறிமுக விழா நேற்று (ஜனவரி 25) சென்னையில் நடைபெற்றது. விழாவில் ரன்வீர் சிங், ஜீவா, கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் ரன்வீர் சிங், ஜீவாவுடன் இணைந்து நடனமாடியது மட்டுமின்றி, கமல்ஹாசன் ஆடிய நடன அசைவுகளையும் ஆடிக் காண்பித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.