Uஇந்தியாவின் கேம் பிளான் சக்சஸ்!

entertainment

இந்தியா-நியூசிலாந்து இடையேயான இரண்டாம் டி20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றுள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் இன்னிங்ஸை துவங்கியது. சென்ற முறை நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்களிடம் ரன்களை வாரி வழங்கிய இந்திய அணியின் பவுலர்களை அணியிலிருந்து வெளியேற்றாமல், அவர்களை வைத்தே இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்களை முடக்கினார் கேப்டன் விராட் கோலி.

நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களான, மார்ட்டின் குப்தில் மற்றும் காலின் மன்ரோ ஜோடி அதிரடியாக ரன்கள் வேட்டையில் இறங்கினாலும், 6 ஓவர்கள் வரை கூட தாக்குபிடிக்க முடியாமல் 48 ரன்களுக்கே முதல் விக்கெட் வீழ்ந்தது. ஷர்துல் தாக்கூர் வீசிய 6ஆவது ஓவரில், விராட் கோலியிடம் கேட்சாகி, 33 ரன்களுக்கு மார்ட்டின் குப்தில் வெளியேற்றப்பட்டார். இதனால் நியூசிலாந்து அணியின் ரன்-ரேட் கட்டுக்குள் வந்தது.

வழக்கம் போல் ஷமி மற்றும் பும்ரா வைத்து ஓவர்களை துவங்கிவிட்டு, இடையில் ஜடேஜா மற்றும் சஹால் வைத்து இன்னிங்ஸை நகர்த்தாமல், விராட் கோலி இம்முறை இளம் வீரர்கள் பகடைக்காயாக பயன்படுத்தி நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டரை திணறடித்தார்.

காலின் மன்ரோ-26 மற்றும் வில்லியம்சன்-14 மற்றும் கிராண்ட்ஹோம்-3 ரன்களில் வெளியேற, 120 ரன்களுக்கு மேல் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் சிக்கியது நியூசிலாந்து. இதன் பிறகு விக்கெட்டுகளை இழக்கமுடியாது என்பதால், ராஸ் டெய்லர்-செயிஃபெர்ட் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

ராஸ் டெய்லர்-செயிஃபெர்ட் ஜோடி கடைசி ஓவர் வரையிலும் தாக்குப்பிடித்து 5ஆவது விக்கெட்டுக்கு 44 ரன்களை சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக செயிஃபெர்ட் மற்றும் குப்தில் 33 ரன்களை அடித்தார்கள்.

இந்திய அணியின் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜடேஜா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா, தாக்கூர் மற்றும் ஷிவம் டுபே தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்கள்.

133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கெட்டுக்கு பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்கள்.

சௌதீ வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில், ரோஹித் ஷர்மா 8 ரன்களுக்கு ராஸ் டைலரிடம் கேட்சாகி பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு களமிறங்கிய விராட் கோலி 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சௌதீ வீசிய 6ஆவது ஓவரில் செயிஃபெர்டிடம் கேட்சாகி வெளியேறினார்.

நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார்கள். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 86 ரன்களை சேர்த்தனர்.

ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சோதி வீசிய 17ஆவது ஓவரில் சௌதீயிடம் கேட்சாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஷுவம் டுபே சிக்ஸ்ர் அடித்து வெற்றியை உறுதிசெய்தார். 15 பந்துகள் மீதமிருந்த நிலையில், 3 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 135 ரன்களை எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கின்றது. 3ஆவது டி20 போட்டி ஜனவரி 29ஆம் தேதி, ஹாமில்டனில் அமைக்கப்பட்டுள்ள செடான் பார்க் மைதானத்தில், இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு நடைபெறவுள்ளது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *