விராட் கோலி: நியூசிலாந்தை பழிவாங்கும் எண்ணம் இல்லை!

entertainment

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி, இன்று (24.01.2020) மதியம் 12:30 மணிக்கு, நியூசிலாந்தில் அமைந்துள்ள ஈடன் பார்க் மைதானத்தில் துவங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. இந்திய அணி 5 பேட்ஸ்மேன்கள், 3 ஸ்பின் பவுலர், 3 ஃபாஸ்ட் பவுலர்களுடன் களமிறங்கியுள்ளது.

நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களான மார்ட்டின் குப்தில்-10 மற்றும் கோலின் முன்ரோ-31 ரன்கள் என போட்டி துவங்கிய முதல் நான்கு ஓவர்களில் 44 ரன்களை எடுத்திருக்கின்றனர்.

**இந்திய அணி பழிவாங்குமா?**

நியூசிலாந்து அணியை இதுவரை 12 டி20 போட்டிகளில் சந்தித்துள்ள இந்திய அணி, 3 முறை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மீதமுள்ள 9 போட்டிகளில் நியூசிலாந்து அணி 8 முறை வெற்றிபெற்றுள்ளது மற்றும் 1 போட்டி முடிவில்லாமல் ரத்தாகியுள்ளது.

2019-ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற, இந்தியா-நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2-1 என்ற கணக்கில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி தொடரைத் தவறவிட்டது. 2018-2019ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணியின் டி20 வெற்றிப்பயணத்திற்கு, அந்த தொடரில் கிடைத்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி முற்றுப்புள்ளி வைத்தது.

நியூசிலாந்தில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடரில், இந்திய அணி ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தாலும், டி20 தொடரை 2-1 என்று கைவிட்டது.

இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் பத்திரிகையாளர்கள்,2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்காக நியூசிலாந்து அணியை பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் இருக்கிறதா?,” என்று கேள்வி எழுப்பினார்கள்.

“பழிவாங்குவதைப் பற்றி யோசித்தாலும், நியூசிலாந்து அணியை போல நல்ல ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிப்படுத்துவோர்களிடம் உங்களால் பழிவாங்கும் எண்ணத்துடன் விளையாட முடியாது,” என்றார் விராட் கோலி.

“கடந்த மூன்று(வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா) அணிகளுடனான தொடர்களில், டி20 போட்டிகளை விட மற்ற (ஒருநாள் மற்றும் டெஸ்ட்) போட்டிகளையே அதிகம் விளையாடியுள்ளோம். டி20 போட்டிகளுக்கு தயாராகுவதற்கு நேரம் குறைவாக இருந்தாலும், எங்களுக்கு அது சற்று சுலபமாகவே இருக்கும்,” என்றார் கோலி. “நடப்பு ஆண்டு டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால், விளையாடவுள்ள அனைத்து டி20 போட்டிகளிலும் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறோம்,” என்றார்.

மேலும் இதுகுறித்து பேசிய விராட் கோலி, “அவர்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கும், அவர்களுடைய அணியின் கேப்டன் கேய்ன் வில்லியம்சன், மைதானத்தின் நுணுக்கங்களை அறிந்து விளையாடுவதில் மிகவும் சாமர்த்தியசாலி,” என்றார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *