Bசாயிஷாவின் ‘ரவுடி பேபி’!

entertainment

மாரி-2 படத்தில் இடம்பெற்று உலக அளவில் பிரபலமான ரவுடி பேபி பாடலுக்கு சாயிஷா நடனமாடுவது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த மாரி-2 திரைப்படம் 2018-ஆம் ஆண்டு வெளியானது. அந்தப்படத்தில் பிரபுதேவாவின் நடன இயக்கத்தில், தனுஷ் மற்றும் சாய்பல்லவி இணைந்து ஆடிய ‘ரவுடி பேபி’ பாடல் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இந்தப்பாடல் இணையதளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டது என்ற பெருமையையும் பெற்றது.

இந்த நிலையில் சாயிஷா மூலமாக மீண்டும் இந்தப்பாடல் பேசு பொருளாக மாறியுள்ளது. பிரபல நடிகையும், நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா ஸ்ரீதர் மாஸ்டருடன் இணைந்து இந்தப்பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் சாயிஷா பகிர்ந்துள்ளார்.

மிகக் கடினமான நடன அசைவுகளை மிக எளிதாக அவர் கையாண்டிருப்பது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *