மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

ஜெயம் ரவியின் தொழிலாளர் தினப்பரிசு!

ஜெயம் ரவியின் தொழிலாளர் தினப்பரிசு!

கோமாளி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயம்ரவி நடித்துவரும் ‘பூமி’ திரைப்படம் தொழிலாளர் தினத்திற்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயம்ரவி நடித்த கோமாளி திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுகளைப்பெற்ற அந்தப்படத்தைத் தொடர்ந்து விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘பூமி’ என்னும் படத்தில் அவர் நடித்துவந்தார். ஜெயம்ரவியின் 25-ஆவது படமாக உருவாகிவரும் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி வரவேற்பைப்பெற்றது. அதில் முண்டாசு கட்டிய வயதான விவசாயிகளுக்கு மத்தியில் மீசையை முறுக்கியபடியிருக்கும் ஜெயம் ரவியின் தோற்றம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்தநிலையில் நேற்று(ஜனவரி 16) பூமி திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட், போகன் போன்ற திரைப்படங்களை இயக்கிய லஷ்மண் இந்தப் படத்தையும் இயக்குகிறார். நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

தற்போது வெளியாகியுள்ள செகண்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இந்தப்படம் 2020-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம்ரவி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon