மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

விண்டோஸ் 10: சில ஐடியாக்கள்!

விண்டோஸ் 10: சில ஐடியாக்கள்!

விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் செயல்பாடு அதிகாரப்பூர்வமாக முடிந்துவிட்டது. இனி அதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது. நீங்கள் இதன்பிறகும் விண்டோஸ் 7 பயனராக இருப்பீர்கள் என்றால் கணினிக்கு வைரஸை தடுப்பதற்கான பாதுகாப்பு எதுவும் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இதனால் கணினியில் பதிந்துவைத்திருக்கும் கோப்புகள் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது.

லைசென்ஸ் வைத்திருக்கும் விண்டோஸ் 7 பயனர் என்றால், சுலபமாக விண்டோஸ் 10 -க்கு மாறுவது எப்படி என்ற வழிமுறைகளை மின்னம்பலத்தில் வெளியான விண்டோஸ் 7: இனி ஒரே வழி தான்! என்ற கட்டுரையில் பார்த்தோம். இவ்வாறு மாறுவதன் மூலம் கணினி முன்பைவிட சற்று வேகம் குறைந்திருக்கும். இதனைச் சுட்டிக்காட்டி, மின்னம்பலம் வாசகர்கள் சிலர், நல்ல லேப்டாப்கள் குறித்த தகவல்களை பதிவு செய்யுமாறு கேட்டதற்கிணங்கி இந்த கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது விண்டோஸ் 10 பொறுத்தப்பட்டு, சிறந்த பேட்டரி லைஃப் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் குறைந்த விலைக்கு கிடைக்கும் சில மடிக்கணினிகளை பார்க்கலாம்.

ஏசர் ஆஸ்ப்பயர் (2019)

விலை: 28,000 முதல் 32,000 வரை

Processor: 1.60 GHz (Intel i5-8265U)

RAM: 8 GB

Hard disk: 256 GB

15.6 இன்ச் டிஸ்பிளே கொண்டிருந்தாலும் மிகவும் எடை குறைந்த மடிக்கணினி. மின்னஞ்சல், குறைந்தப்பட்ச கிராபிக்ஸ் கார்டு பொறுத்தப்பட்டிருப்பதால் அதிக கிராபிக்ஸ் கொண்ட கேம்ஸ் விளையாடுவதற்கு இந்த கணினி சரியான தேர்வாக அமையாது. போட்டோஷாப் போன்ற சாப்ட்வேருக்கு ஏற்ற அளவுக்கு இந்த மடிக்கணினி சரியாக வரும்.

ஆப்பிள் மேக்புக் ஏர்

விலை: 68,000 முதல் 72,000 வரை

Processor: 1.60 GHz (dual-core Intel Core i5)

RAM: 8 GB

Hard disk: 128 GB

ஆப்பிள் நிறுவனத்தினிடம் இருந்து கிடைக்கும் விலைகுறைந்த, 13 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கும் இந்த மடிக்கணினி போட்டோஷாப் போன்ற சாப்ட்வேருக்கு மிகவும் பொருத்தமானது. மிகவும் மெலிசான வடிவத்திலிருக்கும் இந்த மடிக்கணினியின் டிசைன் வேலைப்பாடுகள் மிகவும் உயர்தரமாக காட்சியளிக்கும்.

HP CHROME BOOK 15

விலை:28,000 முதல் 35,000 வரை

Processor: 1.60 GHz (Intel Core i3-8130U)

RAM: 4 GB

Hard disk: 128 GB

டிஸ்பிளேவுக்கு(15.6 இன்ச்) முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்ட இந்த மடிக்கணினியில் பொருத்தப்பட்டிருக்கும் USB-போர்டல் மூலம், டிவி போன்றவற்றில் நம்மால் காட்சிகளை பார்த்துக்கொள்ள முடியும்.

டெல் ஜி15 5590

விலை:57,000 முதல் 62,000 வரை

Processor: 4.0 GHz (Intel Core i5 8300H )

RAM: 8 GB

Hard disk: 128 GB

கிராபிக்ஸ் கார்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டது. PUBG, Free Fire போன்ற கேம்களை தடையின்றி விளையாடக்கூடிய அளவிற்கு இந்த மடிக்கணினி தயாரிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 6

விலை:48.000 முதல் 52,000 வரை

Processor: 1 GHz (Intel Core i5 8300H )

RAM: 4 GB

Hard disk: 128 GB

கழட்டி மாட்டும் வசதிக்கொண்ட இந்த மைக்ரோசாஃப்ட்டின் படைப்பு, மடிக்கணினி மற்றும் டேப்லெட் போன்ற வகையில் பயன்படுத்திக்கொள்ளும் வசதிப்படைத்தது. குறைந்தபட்ச ப்ராசஸர் பொறுத்தப்பட்டிருந்தாலும் விண்டோஸ் 10 -இன் செயல்பாடுகள் அனைத்தும் இதில் காணப்படும்.

வியாழன், 16 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon