மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 8 ஏப் 2020

தர்பார் வசூல்: ஏழு நாட்களில் கிடைத்தது எவ்வளவு?

தர்பார் வசூல்: ஏழு நாட்களில் கிடைத்தது எவ்வளவு?

ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் ஜனவரி 9 அன்று வெளியான திரைப்படம் தர்பார். இந்தப் படத்திற்கான ஓப்பனிங் நகர்ப்புறங்களை தவிர்த்து புறநகர்களில் முதல்நாள் தொடக்கக் காட்சியைத் தவிர்த்து வசூல் சுமாராகவே இருந்து வந்தது.

கடந்த 7 நாட்களில் தமிழகம் முழுவதும் 80 கோடி ரூபாய் வசூலை எட்டியிருக்கிறது தர்பார்.

செங்கல்பட்டு ஏரியா - 19.316கோடி ரூபாய்

கோவை ஏரியா - 12.97கோடி ரூபாய்.

சென்னை ஏரியா - 9.53 கோடி ரூபாய்

சேலம் ஏரியா - 6.63 கோடி ரூபாய்

மதுரை ஏரியா - 10.41 கோடி ரூபாய்

திருச்சி ஏரியா - 7.78 கோடி ரூபாய்.

நெல்லை ஏரியா - 5.13 கோடி ரூபாய்

சேலம் ஏரியா - 6.63கோடி ரூபாய்

South, North ஏரியா - 8.11 கோடி ரூபாய்.

ஏழு நாட்களில் 79.94 கோடி ரூபாய் மொத்த வசூல் தர்பார் திரைப்படத்துக்குக் கிடைத்திருக்கிறது. 2019 பொங்கல் பண்டிகையையொட்டி ரஜினியின் பேட்ட, சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் வெளியாகின.

தர்பார் திரைப்படத்தை வாங்கி வெளியிட்ட அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் பத்தாம் நாள் அசல் கிடைக்கும். அடுத்து வரும் நாட்களில் தர்பார் வசூல் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய லாபமாக இருக்கும் என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.

திருச்சி ஏரியாவில் தர்பார் படத்தை அதிக விலை கொடுத்து வாங்கியது ஆளுங்கட்சி பிரமுகர் ஆவின் கார்த்திக். பிற ஏரியாக்களின் விலையுடன் ஒப்பிடுகிறபோது திருச்சியில் ஒரு கோடி ரூபாய் அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை இந்தப் பகுதியில் வசூல் மூலம் அசல் வரவில்லை. இதற்கு காரணம் என்னவென்று விசாரித்தபோது தர்பார் படத்தை வாங்கியுள்ள நபருக்கு வியாபாரம் பற்றி ஒன்றும் தெரியாது. அதனால் இந்தப் பகுதியில் உள்ள விநியோகஸ்தர்கள் மூலம் தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் படங்களை திரையிட 75% முதல் 80% வரை வினியோகஸ்தர்களுக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது. ஆனால் இங்கு

65% என்கிற அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் காரணமாக பிற ஏரியாக்கள் போன்றுமிக அதிகபட்சமான பங்குத் தொகை கிடைக்கவில்லை எனக் கூறுகின்றனர் விநியோகஸ்தர்கள்.

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon