மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

அடங்காத காளையும், அடங்க வைத்த கமெண்டும்: அப்டேட் குமாரு

அடங்காத காளையும், அடங்க வைத்த கமெண்டும்: அப்டேட் குமாரு

‘அவனியாபுரத்துலயும், அலங்காநல்லூரிலயும் வீரர்களைக் கதற விட்ட ராவணன்’ அப்டீன்னு ஜல்லிக்கட்டு வீடியோவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் ஃபேஸ்புக்ல போஸ்ட் போட்டிருந்தாரு. “நெஜமாவே அந்த காளையோட கெத்து இருக்கே, என்ன தான் அடக்கப்போன நம்ம பசங்களுக்கு அடிபட்டிருக்குமோனு மனசில ஒரு பயம் வந்தாலும், காளைங்க நம்ம காளையரத் தூக்கி வீசி கெத்துகாட்டும்போது ஒரே புல்லரிப்பா தான் இருக்கு”ன்னு மனசில நினைச்சுகிட்டேன். அட நாம கூட நல்லா யோசிக்கிறோமே, இதையே வீடியோவுக்குக் கீழ கமெண்ட்ல போட்டிருவோம்னு நெனச்சுப் பாத்தா, அதுக்குள்ள ஏகப்பட்ட கமெண்ட்டு, ஒருத்தர் என்னடான்னா, ‘அந்த காளை தான் எங்க தலைவர் ஸ்டாலின், அந்த சின்னப்பசங்கள மாதிரி தான் எல்லா கட்சியும் அவர பாத்து பயந்து நடுங்குது, ஏன் கூட்டணியில இருக்குற காங்கிரஸே பயப்படுது’ன்னு போஸ்ட் போட்டிருக்காரு. இன்னொருத்தர் என்னடான்னா ரெண்டு காளைங்க நிக்கிற ஃபோட்டோவ போட்டு, ‘கெத்து காட்டும் எங்கள் அண்ணன்கள் எடப்பாடியும், பன்னீரும்னு போட்டிருக்காங்க’, அது கூட பரவாயில்ல, ஒருத்தர் ஃபோட்டோஷாப் ஃபோட்டோவையே ஃபோட்டோஷாப் பண்ணி ‘ஹமாரா மோடிஜீ, அமித்ஷாஜீ’ன்னு கமெண்ட் போட்டிருக்காரு. மேற்கொண்டு கமெண்ட் படிக்க முடியாம டிவிட்டர் பக்கம் போனா. ‘குறைந்த விலையில் குறைவற்ற அறிவு வேண்டுமா, இன்றே வாங்கிப் படியுங்கள் துக்ளக்’னு ஒரு ட்வீட் பாத்தேன். இத எல்லாம் பாக்குறதுக்கு பிகில் படமே பரவாயில்லன்னு ஃபோன ஓரமா வச்சிட்டு டிவிய போட்டேன். நீங்க அப்டேட்ட படிங்க. நான் போய் படம் பாக்குறேன். சிங்கப்பெண்ணே..சிங்கப்பெண்ணே...

பர்வீன் யூனுஸ்

காங்கிரஸ் தன்மானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் - ஜெயகுமார் # யாரு அங்கே சிரிக்கிறது.. ஓ குருமூர்த்தியா..?

கவி

நமது மனமும் ஒரு கல் மாதிரிதான்.!

எவ்வளவு அடி வாங்குகிறதோ அவ்வளவு அழகான சிற்பமாக

மாறிவிடும்..!

இதயவன்

திமுக விமர்சனத்தை காங்கிரஸ் எப்படித்தான் தாங்கி கொள்கிறதோ? - ஜெயக்குமார்

கோட்டைக்குள் முதலமைச்சர் அறையில் சோதனையிட்ட போது நீங்க எப்படி தாங்குனீங்களோ அப்படிதான் டைசன்?!!!

வஸந்த் மாரிமுத்து

சாதியை வைத்துச்

சாதிக்க

நினைக்காதே ,

வாதிக்க

முயன்றாலும் சாதிக்க

இயலாது ...

இரண்டு நாளா ஓய்வே இல்லை சற்றே ஓய்வு

balebalu

என்னங்க இது ? பொறந்த குழந்தையை பார்க்க வந்துட்டு இப்படி கையில ஏதோ ஒரு புத்தகத்தை திணிச்சுட்டு போறாரு ?

ஓ அதுவா ? குழந்தை சீக்கிரம் அறிவாளியா ஆகுறதுக்காக துக்ளக்கை gift கொடுத்திருக்காரு

சிலந்தி

காலண்டரில் தேதி பேப்பரை கிழிக்காமல் இருந்தால்..

நாட்கள் தங்கிடாது..!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தின் எல்லா வழித்தடத்திலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது🤔

கோழியின் கிறுக்கல்!!

ரூபாய் நோட்டில் லட்சுமி படம் அடித்தால் பணமதிப்பு உயரும்- சு.சாமி!!

யாருக்கு தெரியும், இவரும் துக்ளக் படிச்சவரா இருப்பாரு!!

ச ப் பா ணி

பொய்யை

பொருந்த சொல்வது

பொருத்தம் பார்க்கும்போது தான்

பர்வீன் யூனுஸ்

கையில் முரசொலி வைத்திருந்தால் திமுககாரன் என்பார்கள்.துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி - ரஜினிகாந்த் வாடகை பாக்கி வைத்திருந்தால்..?

கடைநிலை ஊழியன்

பஸ்ஸில் ஜன்னல் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது குளிர்காலம் !!

இனியவன்

பாஜக தலைவராக சாமிநாதன் தேர்வு - செய்தி

யாரும் பதறாதீங்க இது புதுச்சேரிக்கு.!

ச ப் பா ணி

நாய்கள் ஜாக்கிரதை பலகையை பகலில் வீட்டுக்கும்

இரவில் வீதிக்கும் மாட்டிவிட வேண்டும்

-லாக் ஆஃப்

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon