மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

மீண்டும் சித்தி

 மீண்டும் சித்தி

உலகெங்கிலும் உள்ள தமிழ் குடும்பங்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சித்தி மெகா தொடரின் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது.

சுமார் இருபது வருடங்களுக்கு முன் சன் டிவியில் ஒளிப்பரப்பான சித்தி சீரியல் தமிழகத்தில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை . ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரித்திருந்தது. அதிலும், ‘கண்ணின் மணி கண்ணின் மணி கதை கேளம்மா’ என்ற சித்தி தொடரின் தலைப்புப் பாடல் திரைப்படப் பாடல்களைத் தாண்டியும் பெரும் வரவேற்பு பெற்று பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. வைரமுத்து எழுதி, தீனா இசை அமைக்க நித்ய ஸ்ரீ பாடியிருந்தார்.

சிவகுமார், தீபாவெங்கட், யுவராணி, அஜய் ரத்னம், ரியாஸ் கான், பூவிலங்கு மோகன் மற்றும் பலர் நடித்து இருந்தனர். c.j. பாஸ்கர் கதை எழுதி இயக்கியிருந்தார். இந்தியாவில் வெளியான சீரியல்களிலேயே சித்தி தான் அதிகமுறை பார்க்கப்பட்ட சீரியல் ஆகும்.

மிக பெரிய வெற்றியடைந்த சித்தி சீரியல் தொடர்ந்து அண்ணாமலை, செல்வி, அரசி, சந்திரகுமாரி, வாணி ராணி போன்ற சீரியல்களில் தோன்றினார். ஆனாலும் சித்தியின் சாதனையை எதுவும் தொடவில்லை.

இந்த நிலையில்தான், நீண்ட இடைவேளைக்கு பிறகு சித்தி-2 அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ராதிகாவே சித்தி கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். உடன் பொன்வண்ணன், ரூபினி, டேனியல் பாலாஜி, நிஷாந்தி மற்றும் பலர் நடிக்கின்றனர். வரும் ஜனவரி 27 முதல் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது சித்தி.

திரைப்படங்கள் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சீரியல் நீண்ட வருடங்கள் கழித்து இரண்டாம் பாகமாக எடுக்கப்படும் சாதனையையும் செய்கிறாள் சித்தி.

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon