அல்வா பட்ஜெட்டும் அசராத எடப்பாடியும்: அப்டேட் குமாரு

entertainment

‘என்ன தம்பி மூணு மணி நேரமா கஷ்டப்பட்டு பட்ஜெட்ட படிச்சு முடிக்கிறதுக்குள்ளயே சென்செஸ் கீழ போயிருச்சு. கமல் வேற அல்வால தொடங்கி அல்வால முடிஞ்ச பட்ஜெட்னு சொல்லியிருக்காரு. இது எல்லாம் எங்க போய் முடியுமோன்னு ஒரு டவுட்டா இருக்குப்பா’னு டீக்கடையில அண்ணா ஒருத்தரு சோகமா சொல்லிட்டு இருந்தாரு. ‘எல்லாம் நல்லதுக்குத் தான் அண்ணா, சீக்கிரமே புதிய இந்தியா பொறக்கும் நம்புவோம்’னு சொல்லி சமாதானம் செஞ்சிட்டு வந்தேன். வெளிய கிளம்பின என்னைய டீக்கடை அண்ணா அவசரமா கூப்பிட்டாரு. என்னன்னு கேட்டா, ‘எவ்வளவு கொடுமையா, யார் மொக்க போட்டாலும் தூங்காம இருக்கணுமா, இந்த வீடியோவில அதுக்கு வழி இருக்குப்பா பாரு’ன்னு சொன்னாரு. நானும் ஆர்வமா வாங்கிப் பாத்தா ‘பட்ஜெட் எக்ஸர்சைஸ்’ வீடியோ, சிரிப்பு தாங்கல. இருந்தாலும் டெக்னிக் நல்லா தான் இருக்கு. நானும் ஃபாலோ பண்றேன்னு சொல்லிட்டு வந்தேன். சரி கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாமேன்னு ஃபேஸ்புக்க தொறந்து பாத்தா, ‘சீறும் சித்தாண்டி: சிக்கிய எடப்பாடி’ன்னு போஸ்ட் போட்டிருக்காங்க. என்னடா இது புதுக்கதைன்னு பாத்தா நம்ம குரூப் 4 பிரச்னையில போற போக்கில முதல்வரையே இழுத்துவிட்டிருக்காங்க. பாவம் அவரே எம்ஜிஆர் படத்தப் பாத்து ஆக்கப்பூர்வமான விஷயங்கள செஞ்சிட்டு இருக்காரு. அவரப் போய் இப்பிடி சொல்றாங்களேன்னு ஒரே ஃபீலிங்கா போச்சு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் கண்ணுக்கு கொஞ்சம் எக்ஸர்சைஸ் பண்ணிட்டு வர்றேன்.

**வெண்மதி**

ஒத்திகை

பார்க்காத

நடனம்.

குழந்தையின் நடை

**எமகாதகன்**

மக்களின் வருமானத்தை

உயர்த்தும் பட்ஜெட்டாக

இது இருக்கும்

-நிர்மலா சீதாராமன்

எந்த மக்களின் பட்ஜெட் தாயி

**மித்ரன்**

எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளின் ஒரு பகுதி விற்கப்படும் – நிர்மலா சீதாராமன்

இப்படி ஒன்னொன்னா வித்துட்டு இருந்தா எப்படி? மொத்தமா நாட்டையே தனியாருக்கு வித்துற வேண்டியது தான..?!

**இதயவன்**

மக்களின் வருமானத்தை உயர்த்தும் பட்ஜெட்டாக இது இருக்கும் – நிர்மலா சீதாராமன்

அந்த லிஸ்ட்ல இந்திய மக்கள் இருக்காங்களான்னு பாத்து சொல்லுங்க?!!!😆

**ஆர்வக்கோளாறு**

நிர்பயா கொலை குற்றவாளிகளை நாளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடையாம்!

உங்களால முடியலனா சீனாவுக்கு ஒரு டிக்கெட் போட்டு அனுப்பிவிடுங்க !

நிதி இருந்தாதான் நீதி கிடைக்கும் போல ..?!

**மெத்த வீட்டான்**

நாடு முழுவதும் 2024 ம் ஆண்டுக்குள் 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும் -நிர்மலா சீதாராமன்

நாட்டுக்குன்னு இருக்குற ஒரே விமான சர்வீசை வித்துட்டு 100 ஏர்போர்ட் கட்ட போற தியாகி சார் நாம !

**மயக்குநன்**

உலக நாயகனுக்கு உலக அறிவு இல்லை!- ஹெச்.ராஜா.

அவரையும் ‘துக்ளக்’ படிக்கச் சொல்றாரோ..?

**mohanram.ko**

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது நடந்தாலும், ரஜினி தேர்தல் களத்துக்கு வருவார்!- தமிழருவி மணியன்.

வரும்போது முள் குத்தாம பார்த்துக்கோங்க

**மெத்த வீட்டான்**

எந்த வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும் முதலில் பரவுவது வாட்ஸ்அப்பில்தான் !

**பாலசுப்ரமணி**

ஏன்டா மணியா இப்ப யாராவது “மன்னிப்பு” விவகாரம் பத்தி பேசுறாங்களா?

இல்லீங்ணா எல்லாரும் இப்ப “வட்டி”யைப் பத்திதான் பேசுறாங்ணா

**பாண்டி பிரகாஷ்**

நிராகரிப்புகள் ஒவ்வொன்றும் தன்னம்பிக்கைக்கு விதை போட்டு கொண்டிருக்கும்

**மெத்த வீட்டான்**

சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு 2500 கோடி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்

நம்ம பிரதமர் மோடிக்குதானே !

-லாக் ஆஃப்

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *