மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 ஜன 2020

‘ஹரிவராசனம்’ விருது பெறும் இளையராஜா

‘ஹரிவராசனம்’ விருது பெறும் இளையராஜா

கேரள அரசு சார்பில் இன்று (ஜனவரி 15) இளையராஜாவிற்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படுகிறது.

இளையராஜா இசைத்துறைக்கு வந்து 44 வருடங்கள் கடந்து விட்ட நிலையில், கேரள அரசின் இந்த விருது அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 1970-ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஒரிசா எனப் பல இந்திய பிராந்திய மொழிகளிலும் 1௦௦௦க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வெளியாக இருக்கும் ‘சைக்கோ’ படத்திற்கு இசையமைத்துள்ளார். அந்தப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் வெளியாகி, இசை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ஐந்து முறை தேசிய விருதும், மூன்று சர்வதேச விருதுகளும், ஆறு தமிழ்நாடு அரசு விருதுகளும் உட்பட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

அது மட்டுமல்லாது மத்திய அரசின் ‘பத்ம பூஷன், பத்ம விபூஷன்’, மாநில அரசின் ‘கலைமாமணி’ பட்டத்தையும் பெற்றுள்ளார். ஏற்கனவே கேரள அரசு 2௦16-ஆம் ஆண்டு இளையராஜாவிற்கு கலைக்கு தொண்டு ஆற்றியவர்களுக்கு வழங்கும் ‘நிஷாகாந்தி புரஸ்காரம்’ என்ற விருதை வழங்கி கௌரவித்து இருந்தது. தற்போது ‘ஹரிவராசனம்’ விருது இளையராஜாவிற்கு வழங்கப்பட இருப்பதாக கேரளாவின் சுற்றுலா துறை அமைச்சர் கடந்தமாதம் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று சபரிமலை சந்நிதானத்தில் இந்தவிருது வழங்கப்பட உள்ளது. இதற்கு முன்னர் இவ்விருதை யேசுதாஸ், பாலசுப்ரமணியம், கங்கை அமரன், சித்ரா, பி. சுசீலா போன்றவர்கள் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

4 நிமிட வாசிப்பு

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

3 நிமிட வாசிப்பு

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி ...

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி வருமா ?

புதன் 15 ஜன 2020