மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

சித் ஸ்ரீராமின் இசை மழைக்கு ரெடியாகலாம்!

சித் ஸ்ரீராமின் இசை மழைக்கு ரெடியாகலாம்!

சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு மடோனா நடிப்பில் பிப்ரவரி வெளியீடாக வர இருக்கும் வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் எழுதி தயாரித்து இருக்கும் இந்தப் படத்தை, விஜய் யேசுதாஸ் நடிப்பில் வெளியான “படைவீரன்” திரைப்பட இயக்குநர் தனா இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலமாக பாடகர் சித் ஸ்ரீராம், இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி இசைப்பிரியர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள நிலையில், வரும் ஜனவரி 23ஆம் தேதி பாடல்களும் டிரெய்லரும் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதுபற்றி மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் அதிகாரபூர்வமாகத் தகவல் வெளியிட்டிருக்கிறது.

மணிரத்னம் ஏற்கனவே இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், டும் டும் டும், நேருக்கு நேர், குரு, பைவ் ஸ்டார், ஒ காதல் கண்மணி ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார், வானம் கொட்டட்டும் மணிரத்னம் தயாரிப்பில் வரும் 19ஆவது திரைப்படம். இதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகாவுடன் இணைந்து தயாரிக்கிறார். தற்போது அந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கு இடைவேளை விட்டுள்ளனர். அதற்கிடையில் வானம் வசப்படும் திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகளை முடித்து, பிப்ரவரியில் திரைக்குக் கொண்டுவர இருக்கின்றனர்.

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon