மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

பொல்லாதவன் இந்தி ரீமேக்!

பொல்லாதவன் இந்தி ரீமேக்!

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த வெற்றி திரைப்படமான “பொல்லாதவன்” தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது.

2007இல் வெற்றிமாறன் எழுதி இயக்கிய “பொல்லாதவன்” வெளியானது. இந்தப் படத்தின் வெற்றி, தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்க வழிசெய்தது. கடைசியாக இந்தக் கூட்டணியிலிருந்து வெளிவந்த “அசுரன்” படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தற்போது இந்தக் கூட்டணியின் முதல் திரைப்படமான “பொல்லாதவன்” இந்தியில் “கன்ஸ் ஆஃப் பனாரஸ்” என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

ஏற்கனவே இந்தத் திரைப்படம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் ஆகியிருக்கிறது. இரண்டும் படுதோல்வியைத் தழுவியதற்கு தமிழ்ப் பதிப்பில் இருந்த பாத்திரப் படைப்பும், கதைச்சூழலும், ஆக்கமும் ரீமேக்கில் இல்லாமல் போனதே காரணம்.

இந்த நிலையில் தெலுங்கு இயக்குநர் சேகர் சூரி இந்தியில் இதை இயக்குகிறார். இவர் இயக்கிய “எ பிலிம் பை அரவிந்த்” தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின்னர் அது தமிழில் வெளியாகி வெற்றி கண்டது. சேகர் சூரி இயக்குவதால் கன்ஸ் ஆஃப் பனாரஸுக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. கூடுதலாக பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன் முக்கியமான பாத்திரம் ஒன்றில் தோன்றுகிறார். இவர் தமிழில் அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன், தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். பிப்ரவரி 28ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

புதன், 15 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon