மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 ஜன 2020

ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள்!

ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள்!

ஒவ்வொரு வருடமும் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது ஐசிசி-யின் வழக்கம். அந்த வகையில் 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களையும், அவர்களுக்கான விருதுகளையும் அறிவித்திருக்கிறது ஐசிசி.

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்: ரோஹித் ஷர்மா

சிறந்த கிரிக்கெட் வீரர்: பென் ஸ்டோக்ஸ்

சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்: பாட் கம்மின்ஸ்

ரோஹித் ஷர்மா

இந்திய வீரரான ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய சிறப்பான பேட்டிங் திறமையால் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் ரோஹித் ஷர்மா. உலக கோப்பையின் போது எதிரணிக்கு அதிக இலக்கை டார்கெட்டாக கொடுப்பதில் பெரும் பங்காற்றினார். காயம் காரணமாக தவன் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேறிய போது, கே.எல்.ராகுல் இவருடன் இணைந்து ஆட்டத்தை துவங்கினார்.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் மட்டும் இவர் 5 சதங்களை எடுத்துள்ளார். ஒரே உலகக் கோப்பை போட்டியில் 5 சதங்களை ஒரு வீரர் எடுத்தது இதுவே முதல் முறை. இவர்2019ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 7 சதங்களை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பென் ஸ்டோக்ஸ்

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றுவதற்கு பெரும் பக்கபலமாக இருந்தார். இந்த விருதுக்காக வாக்களிக்கும் நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் விளையாடியிருந்த 20 ஒருநாள் போட்டிகளில் 719 ரன்கள் மற்றும் 12 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். டெஸ்ட் போட்டிகளிலும் 821 ரன்கள் மற்றும் 22 விக்கெட்டுகளை வெறும் 11 டெஸ்ட் போட்டிகளில் எடுத்திருந்தார். 2019ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தலை சிறந்து விளங்கியதற்காக, இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், உலகிலேயே சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

பாட் கம்மின்ஸ்

2020ஆம் ஆண்டு நடைபெறப்போகும் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில், அதிக விலைக்கு விற்கப்பட்ட பாட் கம்மின்ஸ் ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் நம்பர் 1 பவுலராக இருந்து வரும் பாட் கம்மின்ஸ் டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூபாய் 15.5 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். ஒரு பவுலர் இந்த விலைக்கு ஏலம் எடுக்கப்படுவது இதுவே முதல் முறை.

2019ஆம் ஆண்டில் மட்டும் இவர் 59 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து அதிக டெஸ்ட் விக்கெட்களை எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் இருக்கும் பவுலருக்கும் இவருக்கும் 14 விக்கெட்டுகள் வித்தியாசம் இருப்பது கவனிக்கத்தக்கது.

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

4 நிமிட வாசிப்பு

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

3 நிமிட வாசிப்பு

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி ...

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி வருமா ?

புதன் 15 ஜன 2020