மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 ஜன 2020

அறிவாளி பொங்கலும் ஜல்லிக்கட்டும்: அப்டேட் குமாரு

அறிவாளி பொங்கலும் ஜல்லிக்கட்டும்: அப்டேட் குமாரு

‘அண்ணே, என்ன நினைச்சா எனக்கே வருத்தமா இருக்குண்ணே’ அப்டீன்னு பொங்கல் அதுவுமா பக்கத்து வீட்டு தம்பி பொலம்பிகிட்டு இருந்தான். என்ன ஆச்சு டா ‘இன்னைக்கும் குளிக்காம காலையில பொங்கல் சாப்பிட்டு தொலச்சிட்டியா’ன்னு கேட்டா, ‘அதெல்லாம் இல்லண்ணே கஷ்டப்பட்டு நாலு வர்ஷம் இஞ்ஜினீயரிங் படிச்சு, வேலைக்கு எல்லாம் போய் என்ன பிரயோஜனம்? வேலையில ஒரு சின்ன மிஸ்டேக் பண்ணிட்டேன். என்ன பாத்து ஆஃபீசில ஒரு புதுப்பையன் உனக்கு எல்லாம் அறிவே இல்லையான்னு கேட்டுட்டான் அண்ணே. நான் பதில் எதுவும் சொல்லாம பேசாம வந்திட்டேன்’ன்னு சொன்னான். இத எல்லாம் கேட்டிட்டு இருந்த பக்கத்து வீட்டு அக்கா, ‘ஏன் அமைதியா வந்திட்ட, எனக்கா அறிவில்ல? நான் எல்லாம் துக்ளக் படிக்கிறவன்டா-னு அவன் கிட்ட சொல்லிட்டு வரவேண்டியது தானே’னு கேட்டாங்க. அதுக்கு அவன் குடுத்த ரியாக்‌ஷன் இருக்கே!. சரி, அப்பிடியே பேச்ச மாத்தலாம்னு, ‘அண்ணே நம்ம எடப்பாடி ஐயா கிரிக்கெட் போட்டின்னா கிரிக்கெட் விளையாடி ஆரம்பிச்சு வைக்கிறாரு, டென்னிஸ் போட்டிக்கு டென்னிஸ் விளையாடி ஆரம்பிச்சு வைக்கிறாரு. அவர ஏன் ஜல்லிகட்டு ஆரம்பிச்சு வைக்க மட்டும் கூப்பிடவே இல்ல’ன்னு கேட்டான். இவன் கலாய்க்கிறானா, நிஜமா சொல்றானான்னு தெரியாம நான் ஒரு கரும்ப தூக்கிட்டு வந்திட்டேன். நீங்க அப்டேட்ட படிங்க. நான் சாப்பிட்டு வர்றேன்.

ஜோக்கர்

கோலி ~ நல்லவேளை மச்சான், நேத்து நா வாங்கவேண்டிய அடிய, குறுக்க புகுந்து ரஜினின்னு ஒரு ஆளு வாங்கிட்டு போயிருக்கான் மனுஷன்

ரஹீம் கஸ்ஸாலி

பையனை போட்டு ஏன் அடிக்கறீங்க?

துக்ளக்கை படிடான்னா... அதைப் படிக்காமல் பாட புத்தகத்தை எடுத்து வச்சு படிச்சுட்டு இருக்கான்.

எப்படி சார் அறிவு வளரும்?

Priyan

"திமுக காங்கிரஸ் இடையே பஞ்சாயத்து..

அதிமுக பாஜக இடையே பஞ்சாயத்து.."

அடுத்து வர தேர்தல்ல என்ன ட்விஸ்ட் வேணாலும் நடக்கலாம்

காத்திருப்போம்..!

சரவணன்

இந்த பக்கம் ரஜினி போட்டோ. இன்னொரு பக்கம் மோடி போட்டோ வச்சிட்டா தமிழகம் கவலைப்படவே தேவையிருக்காது..!- குருமூர்த்தி

ஷோகேஸ்ல தானே...!

கோழியின் கிறுக்கல்!!

2000 ரூபாய் நோட்டுல சிப்பு இருக்கு என்பதற்கும்,

துக்ளக் படிச்சா அறிவாளி என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை!!

சரவணன்

பீஸ்புல்லா இருந்தால்தான்

சிறப்பாக இருக்கும்

பிரியாணியும் வாழ்க்கையும்

ச ப் பா ணி

அறிவிருக்கானு கேட்டாள் மனைவி..

துக்ளக் இருக்குது என்றேன்.

அமைதியாக சென்றுவிட்டாள்.

Kadhalan

தன்னை வெற்றி கொண்டு

விடுவார்கள் என்று

பயப்படுபவனுக்கு

தோல்வி நிச்சயம்

துணிவே வெற்றியின்

முதல்படி

கோழியின் கிறுக்கல்!!

வீட்டுக்கு வெளியே திரையில் வரும் ரஜினிகாந்த் போல கெத்தாகவும்,

வீட்டுக்குள்ளே மேடையில் பேசும் ரஜினி போல காமெடியாகவும் அமைந்து விடுகிறது ஆண்களின் வாழ்க்கை!!

James Stanly

பழசெல்லாம் எரிச்சாச்சி சொன்னாங்க.. ஆனா ப்ரிட்ஜில தக்காளி சட்னி அப்டியே இருக்கு..

பொங்கல் வாழ்த்து

வரும்பொங்கல் அன்று உங்கள் கவலைகள் நித்யானந்தா போல இருக்குமிடம் தெரியாமல் போகட்டும்.

சந்தோஷங்கள் வெங்காய விலை போல அதிகரிக்கட்டும்.

பிரச்சனைகள் மல்லையா போல கண்காணா இடத்திற்கு செல்லட்டும்.

துன்பங்கள் மக்கள் நீதி மையம் போல இடதும் இன்றி வலதும் இன்றி நடுத்தெருவில் நிற்கட்டும்....

தோல்விகள் ரஜினி அரசியல் போல 25 ஆண்டுகள் ஆனாலும் வரேன் வரேன் ணு சொல்லி வராமலே இருக்கட்டும்...

விக்கி_டாக்ஸ்

ரஜினி: தாங்கள் வந்ததின் நோக்கம்?

பேன்ஸ்: தங்களிடம் துக்ளக் படித்து காட்டி அறிவாளி என்று காட்ட வந்துருகிறோம்

மாஸ்டர் பீஸ்

வாய்ப்புகள் பொதிந்திருக்கின்றன நம் தயக்கங்களுக்குள்ளேதான்!

-லாக் ஆஃப்

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

4 நிமிட வாசிப்பு

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

3 நிமிட வாசிப்பு

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி ...

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி வருமா ?

புதன் 15 ஜன 2020