மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 25 செப் 2020

தர்பாரின் 50 கோடி!

தர்பாரின் 50 கோடி!

ரஜினிகாந்த்,நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் ஜனவரி 9 அன்று வெளியான படம் தர்பார். இந்த படத்திற்கான ஓப்பனிங் நகர்ப்புறங்கள் மற்றும் புறநகர்களில் முதல் நாள் தொடக்க காட்சியைத் தவிர்த்து வசூல் சுமாராகவே இருந்து வந்தது

முருகதாஸ் ரஜினி கூட்டணியில் முதல்முறையாக உருவான படம் என்பதால் வசூல் அதிகபட்சமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையரங்குகள் மத்தியில் உருவாகி இருந்தாலும் அவர்களது எதிர்பார்ப்பு பொய்யாகிப் போனது. அடுத்து வரும் ஒரு வாரம் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்ற நம்பிக்கையில் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கிறது தர்பார்.

செங்கல்பட்டு ஏரியா - 12கோடி ரூபாய்

கோவை ஏரியா - 11.80கோடி ரூபாய்.

சென்னை -5.72கோடி ரூபாய்

மதுரை ஏரியா - 6.56

திருச்சி ஏரியா -4.86கோடி ரூபாய்

நெல்லை ஏரியா -4.18கோடி ரூபாய்

சேலம் ஏரியா -4.16கோடி ரூபாய்

South-North ஏரியா -4.84கோடி ரூபாய்.

ஆக, தர்பார் படத்துக்கு இதுவரை 50.28 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகியுள்ளது. இந்த வசூல் தொடரும் பட்சத்தில் பொங்கல் விடுமுறை முடிகிற போது தர்பார் படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிப் பிடிக்கும். பொங்கல் விடுமுறைக்கு பின் இரண்டாவது வாரம் படத்தின் வசூல் சராசரியாக இருக்கும் பட்சத்தில் படம் வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு, வாங்கிய விலைக்கான முதலீடு கிடைத்துவிடும். லாபம் கிடைக்குமா இல்லையா என்பது பட்டாஸ் படத்தின் வெற்றி தோல்வியை பொறுத்து தீர்மானிக்க இயலும்.

கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி ரஜினியின் பேட்ட, சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் விஸ்வாசம் இரு படங்களும் வெளியானது. இந்த வருட பொங்கல் பண்டிகையை ஒட்டி ரஜினியின் தர்பார் ஆறு நாட்களுக்கு முன்னதாக ரிலீசான நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பான "பட்டாஸ்" ஆறு நாட்கள் தாமதமாக பொங்கலன்று தர்பார் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆகிறது.

-இராமானுஜம்.

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon