மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஏப் 2020

டுமினி ஓய்வு!

டுமினி ஓய்வு!

தென்னாப்பிரிக்காவின் ஆல்-ரவுண்டர் ஜீன்-பால் டுமினி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக ஜனவரி 13ஆம் தேதி அறிவித்தார். 2004ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் கால் பதித்த டுமினி, இதுவரை 326 போட்டிகளில்(டெஸ்ட், ஒருநாள், டி20) விளையாடி 9154 ரன்களை எடுத்தது மட்டுமின்றி 132 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளுக்கு பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார் டுமினி.

உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த டுமினி தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இவர் கடைசியாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற காரேபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 120 முதல் வகுப்பு கிரிக்கெட், 274 'ஏ' பிரிவு கிரிக்கெட் மற்றும் 264 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டுமினி முறையே 6774, 7478 மற்றும் 6397 ரன்களை எடுத்து 248 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 83 ஐபிஎல் போட்டிகளில் மும்பை, டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிட்டல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கு விளையாடியுள்ள டுமினி 2029 ரன்களுடன் 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவர் 16 ஐபிஎல் போட்டிகளுக்கு கேப்டனாகவும் தலைமைதாங்கியுள்ளார். டுமினி தனது ஓய்வு குறித்து பேசும்போது "இதன் பிறகு கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு உடல் வலிமை இருந்தாலும் அதனால் எந்த பயனும் இல்லை," என்று கூறினார். 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி U-19 உலகக்கோப்பை போட்டிகளுக்கு கமெண்டேடராக வேலை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார் டுமினி. ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்காக ஹாட்-ட்ரிக் எடுத்த ஒரே வீரர் டுமினி என்பது கவனிக்கத்தக்கது.

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon