மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஏப் 2020

ஹாலிவுட்டுக்கு ரீமேக்காகும் ஒத்த செருப்பு 7

ஹாலிவுட்டுக்கு ரீமேக்காகும் ஒத்த செருப்பு 7

இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் இயக்கிய திரைப்படமான ‘ஒத்தசெருப்பு 7’ கடந்த வருடம் வெளியாகி மக்களின் வரவேற்பைப் பெற்று வெற்றி கண்டது.

சமீபத்தில் நடைபெற்ற தனியார் நிறுவனத்தின் விருதுகள் வழங்கும் விழாவில், தன்னுடைய ஒத்த செருப்பு படத்துக்கு எந்த நாமிநேஷனும் இல்லாததைத் தொடர்ந்து தன்னுடைய அதிருப்தியை ட்விட்டரில் பதிவு செய்து கேள்வி எழுப்பி இருந்தார் பார்த்திபன்.

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பார்த்திபனுக்கு ஆதரவாக ட்வீட் செய்ய துவங்கினர். அதில் ஒரு ரசிகர் பார்த்திபனை குறிப்பிட்டு, “ஹாலிவுட்டில் ஒத்த செருப்பை ரீமேக் செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக “நன்றி. பேச்சுவார்த்தை நடைபெறுகிறது” என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே பாலிவுட்டில் நவாசுதின் சித்திக் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இச்செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

ஒத்தசெருப்பு 7 திரைப்படத்தை பார்த்திபன் எழுதி, தயாரித்து, இயக்கி நடித்தார் சந்தோஷ் நாராயணன் ஒரு பாடலுக்கு இசையமைக்க, சி.சத்யா பின்னணி இசையை வழங்கினார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்து, சுதர்சன் படத்தொகுப்பு செய்ய, ‘ஆஸ்கர் விருது’ பெற்ற ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு செய்து இருந்தார். முழுக்க முழுக்க தனிமனிதன் ஒருவனது பார்வையில் செல்லும் கதையில் ‘மாசிலாமணி’ என்ற கதாபாத்திரத்தில் பார்த்திபன் தோன்றியிருந்தார். ஹிந்தி நடிகர் ஆமிர் கான், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒத்த செருப்பு திரைப்படத்தை வெகுவாக பாராட்டி, தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்தனர்.

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon