மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

இறக்கை விரிக்கும் அக்னி சிறகுகள்!

இறக்கை விரிக்கும் அக்னி சிறகுகள்!

நடிகர் அருண் விஜய் நடிக்கும் திரைப்படமான அக்னி சிறகுகள் ஷூட்டிங் தற்போது கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது.

இயக்குநர் நவீன், மூடர்கூடம் படத்தைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்த படமாக முதலில் “அலாவுதீனும் அற்புத கேமராவும்” ரிலீஸாகும் என்று அறிவித்தார். இதன் டிரெய்லர் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அதைக் கிடப்பில் போட்டுவிட்டு “அக்னி சிறகுகள்” திரைப்படத்தை முழுவீச்சில் இயக்கிக்கொண்டு இருக்கிறார்.

சென்னை, கொல்கத்தா, மாஸ்கோ போன்ற நகரங்களில் நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது முடிவடையும் நிலையில் இருக்கிறது. விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தொடங்க உள்ள நிலையில், நடிகர் அருண் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும், அதைத் தொடர்ந்து குதிரை சவாரி செய்வது போன்ற சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அதில் கஜகஸ்தானின் அல்மாத்தி பனிமலையில், கடும் குளிரில் முக்கியமான சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கி வருவதைப் பற்றி பகிர்ந்துள்ளார்.

“அக்னி சிறகுகள்” படத்தில் விஜய் ஆண்டனி, அக்‌ஷராஹாசன், நாசர், பிரகாஷ் ராஜ், தயாரிப்பாளர் சதீஷ், சென்ட்ராயன் ஆகியோர் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிக்கிறார். கப்பல், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், மூடர்கூடம் படங்களின் இசையமைப்பாளர் நடராஜன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

பிரபல பெங்காலி நடிகை ரைமா சென், முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இது இவரது முதல் தமிழ்த் திரைப்படமாகும். இவர் பாரதிராஜா இயக்கத்தில் 1999 வருடம் வெளியான “தாஜ்மஹால்” படத்தின் கதாநாயகி ரியா செனின் சகோதரி ஆவார்.

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon