மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஏப் 2020

தீபிகாவை கைவிடும் பிராண்டுகள்!

தீபிகாவை கைவிடும் பிராண்டுகள்!

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜேஎன்யு மாணவர்களை தீபிகா படுகோன் சந்தித்தது நாட்டிலிருந்த எல்லா பிரச்சினைகளையும்விட பெரியதாக மாற்றப்பட்டது. இதன் காரணமாக வட இந்தியாவில் எதிர்பார்த்ததைவிட குறைந்த வசூலைப் பெற்றது தீபிகா நடித்த சப்பாக் திரைப்படம். இது தீபிகா படுகோனுக்குச் சிறு பின்னடைவாக இருந்தாலும், அவர் மனம் தளரவில்லை. ஆனால், அதே அளவுக்குத் திடமாக தீபிகாவை விளம்பரத்துக்குப் பயன்படுத்தும் நிறுவனங்கள் இல்லை.

இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பொருட்களுக்கு பிராண்டு அம்பாசிடராக இருந்து வருகிறார் தீபிகா படுகோன். எண்ணற்ற டிவி விளம்பரங்கள், பொருட்களின் மீது அச்சடிக்கப்பட்ட படங்கள் என ஹாலிவுட் சென்று வந்த பிறகு தீபிகாவின் பிராண்டு வேல்யூ நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மாறியது. தீபிகா நடித்த பல்வேறு விளம்பரங்கள் ஒரே நாளில் 11 மணிநேரத்துக்கும் மேலாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு சாதனை படைத்தன. ஆனால், அந்தக் காலம் முடிந்துவிட்டது.

ட்விட்டர் வாழ் நெட்டிசன்ஸ் சிலர், ‘தீபிகா இடம்பெறும் விளம்பரங்களின் பிராண்டுகளைப் புறக்கணிப்போம்’ என்று ஒரு பரப்புரையைத் தொடங்கினர். இதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பித்துவிடுவதற்காக, சில விளம்பர நிறுவனங்கள் அடுத்த சில வாரங்களுக்கு எந்த விளம்பரப் படத்தையும் ஒளிபரப்ப வேண்டாம் என்று முடிவெடுத்து, விளம்பர ஒப்பந்தங்களை மாற்றி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மத்திய அரசின் புதிய திட்டத்துக்காக ஒரு விளம்பரப் படத்தில் நடித்துக்கொடுத்திருந்தார் தீபிகா படுகோன். ஜேஎன்யு போராட்டத்தில் நடைபெற்ற வன்முறையை அடுத்து மாணவர்களுக்கு ஆதரவாக தீபிகா அங்கே சென்றதால், அந்த விளம்பரப் படத்தைக் கைவிட்டுவிட்டு, வேறு நடிகையை வைத்து விளம்பரத்தை எடுக்க முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு.

திங்கள், 13 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon