மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 ஜன 2020

ஸ்மார்ட்போன் உலகின் சாதனை மன்னன் பராக்!

ஸ்மார்ட்போன் உலகின் சாதனை மன்னன் பராக்!

கடந்த சில வருடங்களில் வெளிவந்த ஸ்மார்ட்போன்களில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது Xiaomi கொண்டுவந்த POCO F1 எனப்படும் ஆன்லைன் ஸ்மார்ட்போன். 2019இல் Xiaomi நிறுவனம் பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி ஸ்மார்ட்போன் பிரியர்களைத் திரும்பி பார்க்க வைத்தது. அதுமட்டுமின்றி 2019ஆம் ஆண்டு இந்தியாவில் அதிக ஸ்மார்ட்போன்களை விற்ற நிறுவனங்களில் Xiaomi முதலிடத்தில் உள்ளது.

PUBG போன்ற ஆன்லைன் மல்டிபிளேயர் கேம்கள் வெளிவந்த சமயத்தில் Xiaomi நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த POCO F1, ஆன்லைன் கேம் விளையாட்டு பிரியர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. 6.18 இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்ட்ராகன் 845 ப்ராசஸர் போன்ற அமைப்புகளை கொண்டு கேம் விளையாடும்போது இடையூறு இல்லமால் ஆடுவதற்கு ஏற்றவாறு 6GB RAM பொருத்தப்பட்டு வெளிவந்தது POCO F1.

செல்ஃபி பிரியர்களுக்கு 20 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா. நீண்டநேரம் ஸ்மார்ட்போனில் நேரம் செலவு செய்பவர்களுக்காக 4000mAh பொருத்தப்பட்ட பேட்டரி போன்ற அம்சங்களுடன் மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட POCO F1 இந்தியாவில் 13,000 ரூபாய் முதல் 19,000 ரூபாய் வரை விற்கப்பட்டது.

Xiaomi வெளியிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்தடுத்த மாடல் வெளிவந்துக்கொண்டிருக்க, POCO சீரிஸில் வெளியாகக்கூடிய ஸ்மார்ட்போன்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. இந்த நிலையில் 2020ஆண்டில் POCO F2 ஸ்மார்ட்போன் வெளியாகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெக்னாலஜி ஆராய்ச்சியாளர் ஒருவர், POCO F2 ஸ்மார்ட்போனை டிரேட் மார்க் பதிவு செய்வதற்காக Xiaomi நிறுவனம் சமர்ப்பித்திருந்த ஆவணங்களை ட்விட்டரில் வெளியிட்டதன் மூலம், இந்தத் தகவல் வெளியானது. Xiaomi நிறுவனத்துக்கும் அதன் ஒவ்வொரு துறை தலைவர்களுக்குமிடையே இந்த ஸ்மார்ட்போன் சீரிஸால் பல பிரச்சினைகள் வந்தன. Xiaomi-யின் கிளை நிறுவனமான Pocophone Global நிறுவனத்தின் தலைவர் ஆல்வின் சே “2020இல் POCOphone பற்றி நிறைய கேள்விப்படுவீர்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டு, பிறகு அதை நீக்கிவிட்டார். POCO F1 மாடல்கள் அதிகம் விற்க வேண்டும் என்று Xiaomi நிறுவனம் விலையைக் குறைத்த நேரத்தில் அந்தப் பதிவு வெளியானதால், விற்பனை பாதிக்கக்கூடும் என்று அந்த ட்வீட்டை நீக்கச் சொன்னதாக அப்போது தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

4 நிமிட வாசிப்பு

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

3 நிமிட வாசிப்பு

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி ...

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி வருமா ?

திங்கள் 13 ஜன 2020