மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 ஜன 2020

மாஸ்டர்: ஷூட்டிங் முடிவதற்கு முன்பே பிசினஸ் முடிந்தது!

மாஸ்டர்: ஷூட்டிங் முடிவதற்கு முன்பே பிசினஸ் முடிந்தது!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் ஷூட்டிங் 50 சதவிகிதம் முடிவடைந்திருக்கிறது. படமாக்கப்பட்ட காட்சிகளை ஹார்ட் டிஸ்க்கில் காப்பி செய்து ஸ்டூடியோவுக்குக்கொண்டு செல்வதற்கு முன்பே அதன் பிசினஸை முடித்துவிட்டது மாஸ்டர் திரைப்படத்தைத் தயாரிக்கும் XB Film Creators நிறுவனம்.

விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படத்தின் இரண்டாவது ஷெட்யூல் அதி தீவிரமான வேகத்துடன் நடைபெற்று வருகிறது. கடைசிக் கட்ட ஷூட்டிங்கில் அதிரடி சண்டைக் காட்சிகள் பலவற்றை படமாக்க முடிவெடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதற்குத் திட்டமிட்டதைவிட அதிக பணம் செலவாகும் என முன்கூட்டியே தயாரிப்பு தரப்பிடம் தெரிவித்துவிட்டதால், படம் தயாராகும் வரை காத்திருக்காமல் படத்தின் பிசினஸைத் தொடங்கிவிட்டதாகத் தெரிவிக்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

அமெரிக்கா, கனடா, துபாய், இலங்கை, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் United india exporters & Malik Stream Corporation நிறுவனம் விநியோகம் செய்யும் உரிமையை வாங்கியிருக்கிறது. தமிழகத்தின் விநியோகப் பகுதிகளில் நிர்ணயித்த விலைக்குப் பேரம் பேசாமல் கேட்டவர்களுக்கு உடனடி விற்பனையைச் செய்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

4 நிமிட வாசிப்பு

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

3 நிமிட வாசிப்பு

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி ...

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி வருமா ?

திங்கள் 13 ஜன 2020