மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

ஆப்பிளின் விலை குறைந்த ஐஃபோன்!

ஆப்பிளின் விலை குறைந்த ஐஃபோன்!

2020ஆம் ஆண்டில் ஐஃபோன் SE 2 என்ற புதிய மாடலை ஐ ஃபோன் 12-ல் இருக்கும் அதே வசதிகளுடன் வெளியிடுவோம் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருக்கிறது.  2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்த ஐ ஃபோன் 12, ரூ. 75,000க்கு இந்தியாவில் விற்கப்பட்டது. இது LTPO எனப்படும் பிரத்யேகமான டச் ஸ்க்ரீன் கொண்டு தயாரிக்கப்பட்டது.

'ஐ ஃபோன் SE 2'  மாடலில் 'ஐ ஃபோன் 12'-ல் இருந்த 95 சதவீத வசதிகளைக் கொண்டு வெளியாகும் என்றும், கேமரா மட்டும் குறைந்த அளவிலான தொழில்நுட்பத்துடன் இடம்பெற்றிருக்கும் என்றும் கூறியிருக்கின்றனர். கேமராவின் தொழில்நுட்பத்தைக் குறைத்து, முந்தய விலையைவிட குறைவாக ஐஃபோன் மாடல்களை விற்பனைக்குக் கொண்டுவருவது ஆப்பிளின் புதிய வழியல்ல. ஏற்கனவே, ஐஃபோன் 4, 5 போன்றவற்றிலும் இதேபோன்ற SE(ஸ்பெஷல் எடிஷன்) மாடல்களைக் கொண்டுவந்தனர்.

இந்த ஐஃபோன் SE 2 ஆப்பிளின் சமீபத்திய வெளியீடான ஐஃபோன் 12 இல் உள்ள ப்ராசஸர் கொண்டு, ஐஃபோன் 6 மாடலின் அளவிற்க்கு கையில் எளிதாக வைத்து பயன்படுத்த முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தமுறை ஆப்பிள் நிறுவனம் டிசைன் வேலைகளில் அதிக கவனம் செலுத்தாமல், ப்ராசஸர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.

ஆப்பிள் வெளியிடும் மாடல்களில் அனைவரையும் பெரிதும் கவலைப்பட வைப்பது அதில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி. ஆனால் இந்த SE 2 மாடல் 'ஆப்பிள் A 13' என்ற சிப் கொண்டு உருவாக்கப்படுவதால் 20 சதவீதம் வேகமாக செயல்படும் மற்றும் பேட்டரி அளவு 40 சதவீதத்திற்கும் குறைவாகவே பயன்படுத்தப்படும் என்று தெரிகின்றது. இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் 2020ஆம் ஆண்டில் 5G ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிடப்போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திங்கள், 13 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon