மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 ஜன 2020

ஆபீராவும் அஞ்சாவது ஆளும்:அப்டேட் குமாரு

ஆபீராவும் அஞ்சாவது ஆளும்:அப்டேட் குமாரு

‘பாண்டவர்களை ஆதரித்த எடப்பாடி’ன்னு ஒரு வாட்சப் குரூப்பில மெசேஜ் வந்துச்சு. என்னடா இது புதுக்கதைன்னு நான் யோசிச்சு கேக்குறதுக்குள்ளயே, இன்னொருத்தன் முந்திகிட்டு, ‘என்ன நண்பா இது, இந்த மாதிரி நியூஸ் எதுவும் டிவியில பாக்கலையே’ன்னு கேட்டான். அதுக்கு மெசேஜ் அனுப்பின பையன் புக் ஃபேர்ல நம்ம முதலமைச்சர் பேசின வீடியோவ அனுப்பி இத பாருங்கன்னு சொன்னான். சரி, இதுக்கும் பாண்டவர்களுக்கும் என்னடா சம்மந்தம்னு கேட்டா, ‘ஆபிரகாம் லிங்கன்னு சொல்றதுக்கு பதிலா அவரு ஆபீரா, ஆபீரான்னு வாய் தவறி சொன்னாருன்னு நினைக்கிறீங்களா? அதில தான் விஷயமே இருக்கு. உண்மையிலேயே இந்த ஆபீரா யார் தெரியுமா?’ன்னு புதுசா ஒரு கத சொன்னான். ‘மகாபாரத காலத்தில சரஸ்வதி ஆறு பக்கத்துல இருந்த இடம் தான் ஆபீர நாடு. கௌரவர்களுக்கு ஆதரவா இருந்த இவங்க குருஷேத்திர போரில பாண்டவர்கள எதிர்த்து போரிட்டாங்க. அதத்தான் எடப்பாடி ஐயா ஆபீரான்னு சொல்லி இருக்காரு. அப்பிடியே அந்த கால பாண்டவர்களுக்கும், இந்த கால பாண்டவர்களுக்கும் ஆதரவு கொடுத்திருக்காரு’ னு அவன் சொன்ன விளக்கத்த படிக்கிறதுக்குள்ள எனக்கு தலையே சுத்திருச்சு. ‘ஆமா, இந்த கால பாண்டவர் யாரு?’ன்னு ஆர்வம் தாங்காம இன்னொருத்தன் வந்து கேட்டான். அதுக்கு ‘மோடி, அமித்ஷா, எடப்பாடி அப்புறம் பன்னீர் செல்வம். அஞ்சாவது ஆள சீக்கிரமா சொல்லுவாங்க’ன்னு அவன் சொன்னதும். ‘ஏன் நீங்க போலாமே’ன்னு நான் கேட்டா, கடைக்கு போய்ட்டு வந்து மெசேஜ் பண்றேன்னு சொல்லிட்டு போனவரு தான். இப்போ வரைக்கும் ஆன்லைன் பக்கமே ஆளக் காணோம். நீங்க அப்டேட்ட படிங்க. நான் கால் பண்ணி இங்க தான் இருக்காரா இல்ல. டெல்லிக்கு போய்ட்டாரான்னு விசாரிச்சிட்டு வர்றேன்.

மெத்த வீட்டான்

பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் நடப்பது ஒன்றும் கட்டண கொள்ளை அல்ல

கட்டணமே கொள்ளைதான்!

கருப்பு மன்னன்

"இந்தியா என்றால் இந்துக்கள் நாடு தான்!" - பிரேமலதா விஜயகாந்த்

தேசம்ன்னாஎன்னனு தெரியுமா

சின்னவன்

வீரம்னா என்னன்னு

தெரியுமா இந்த குளிரிலையும்

காலையில எழும்பி குளிக்கிறது

தான்

செங்காந்தள்

தேர்வு அறைகளில் சைகை மொழி பேசப்படுகிறது...!!!

இதயவன்

ஈயைக்கூட அடிக்க மாட்டார் எடப்பாடி பழனிசாமி- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இதனால ஈ தற்கொலை ஒன்னும் பண்ணிக்கலையே?!

சுனா.பானா

அரிது அரிது டிராபிக் இல்லாத சந்து பொந்தை கண்டுபிடிப்பது

அதனினும் அரிது அதிக நாள் அதே சந்து பொந்தை அனைவரும் கண்டுபிடிக்காமல் இருப்பது!

இதயவன்

தமிழக பா.ஜ.க தலைவர் பட்டியலில் என் பெயர் உள்ளது... எஸ்.வி.சேகர்

அதிகமாக கலாய்க்கபடுற பட்டியல்லயும் இருக்கீங்க சேகரு...?!!!

பர்வீன் யூனுஸ்

அரசு பேருந்துகளை திடீரென நிறுத்தி போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு

பிரேக் வேலை செய்யுதான்னு செக் பண்ணியிருப்பாரோ..?

இனியவன்

வன்னியர் கல்வி அறக்கட்டளையே இராமதாஸ் கல்வி அறக்கட்டளை என்று,

ஒரு லிட்டர் பெயிண்டில் சாதியை ஒழித்த பெரிய ஐயா

கடைநிலை ஊழியன்

நாம் அவசரத்தில் இருக்கும் போது சுற்றி நடக்கும் எல்லாமே ஸ்லோவாக தெரிவது டிசைன் !!

மெத்த வீட்டான்

அரசுப் பள்ளிகளில் காலை உணவு என்பது வதந்தி -அமைச்சர் செங்கோட்டையன்

நல்லதை வதந்தின்னு சொல்லுங்க..வதந்தியா இருக்க வேண்டியதை உண்மை ஆக்குங்க

Selva Bharathi

அன்புக்கு விலை அதிகம்.

அதிகம் கொடுத்தால் தான்

சிறிதேனும் திரும்பக் கிடைக்கும்.

இதயவன்

"வரலாற்றில் முக்கிய விஷயங்கள் விடுபட்டிருப்பது வருத்தமளிக்கிறது" - பிரதமர் மோடி.

ஆமா ஜீ பதினைந்து லட்சம் பைசல் பண்ணவே இல்லையே .!??

ரஹீம் கஸ்ஸாலி

டேபிளில் பிரித்து வைத்த ரசப்பொட்டலத்தை நிறுத்துவதும் நாய் வாலை நிமிர்த்துவதும் ஒன்றுதான், நிற்கவே நிற்காது.

ரஹீம் கஸ்ஸாலி

பொருளாதார வீழ்ச்சியால் யாரும் பட்டினியாக இல்லை.. எந்த பாதிப்பும் இல்லை..!- எஸ்வி சேகர்

பாஜகவின் தமிழக தலைவராகும் தகுதி இப்போதே வந்துவிட்டது

Manoj Prabakaran

குறிப்பிட்ட வயதுன்னா?... வயச குறிப்பிடுங்க

எனக்கொரு டவுட்டு ⁉

நல்ல தண்ணி திறந்து விடுற கார்ப்பரேஷன்காரனும் அண்ணா யுனிவர்சிடி எக்ஸாம் ரிசல்ட்ம் ஒண்ணு, நயிட்லதான் ரிலீஸ் பண்றாங்க.!

ச ப் பா ணி

ஒலி கொடுத்தும்

வழி கிடைக்கவில்லை

"ட்ராபிக் ஜாம்"!!

-லாக் ஆஃப்

ஜி.வி.பிரகாஷூக்கு ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்கால் ஏற்பட்ட சோகம் ...

3 நிமிட வாசிப்பு

ஜி.வி.பிரகாஷூக்கு ‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்கால் ஏற்பட்ட சோகம் !

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி ...

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி வருமா ?

சார்பட்டா தாக்கம் ; ஆர்யாவின் இரண்டு புதுப் படங்கள் காட்டும் ...

3 நிமிட வாசிப்பு

சார்பட்டா தாக்கம் ; ஆர்யாவின் இரண்டு புதுப் படங்கள் காட்டும் அவசரம் !

திங்கள் 13 ஜன 2020